Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

டெல்லிக்கு ஆட்டம் காட்டும் ஓபிஎஸ்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையிலான மோதல் போக்கு தொடர் கதையாகவே இருக்கிறது. இருப்பினும் பன்னீர்செல்வத்தை ஏதேனும் ஒருவழியில் சமாதானம் செய்வதை பழனிசாமி வாடிக்கையாக கொண்டிருக்கிறார். முன்னதாக தேர்தல் தோல்விகளால் துவண்டு போயிருந்தாலும், எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறுவதில் பழனிசாமி உறுதியாக இருந்தார்.

எப்போது நான் நம்பர் 2-வாக இருக்க முடியாது என்று பன்னீர்செல்வம் அதிரடி காட்டினார். இறுதியில் ஆதரவு வட்டம் பழனிசாமி பக்கம் சாய, அவரே எதிர்க்கட்சி தலைவராக மாறினார். இதன்மூலம் மீண்டும் அமைச்சர் அந்தஸ்து அவருக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியெல்லாம் வேண்டாம் என்று விடாப்பிடியாக இருந்த பன்னீர்செல்வத்தை இழுத்து வந்து சமாதானம் செய்து ஒருவழியாக அந்த பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் பழனிசாமி.

இதற்கிடையில் இருவருக்கும் இடையிலான அறிக்கை போர் அதிமுகவிற்குள் தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. வழக்கமாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் இணைந்து தான் அறிக்கை வெளியிடுவர். ஆனால் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தனியாக அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

இது கட்சிக்குள் நிலவும் உட்கட்சி பூசலை, அதிகார மோதலை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்நிலையில் பன்னீர்செல்வம் சமீப காலமாக வெளியிட்டு வரும் அறிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அதாவது, நீட் தேர்வு ரத்து, பெட்ரோலை ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட அறிக்கைகள் மத்திய அரசு தொடர்பானவை. தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கும் வகையில் அறிக்கைகள் இருந்தாலும், மத்திய அரசை சீண்டிப் பார்க்கிறார் ஓபிஎஸ்?

இதற்காக கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். எனவே தனது மகனை மறந்துவிட வேண்டாம் என்று வலியுறுத்தும் வகையிலேயே இந்த அறிக்கை அதிரடிகள் என்கின்றனர்.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345