Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

சாலையில் வீசிச் செல்லப்பட்ட 5 மாத ஆண் சிசு!

சென்னை பெரம்பூர் ராகவன் சாலை பகுதியில் குப்பை தொட்டி ஒன்றில் 5 மாத ஆண் கரு சிசு ஒன்றை அட்டை பெட்டியில் வைத்து யாரோ வீசி சென்றுள்ளனர். அதனை அந்த பகுதியில் இருந்த நாய் ஒன்று சாலையில் இழுத்து போட்டுள்ளது. அதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் திரு.வி.க காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் 5 மாதமே ஆன ஆண் கரு குழந்தையை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 5 மாதமே ஆன சிசு கருவை குப்பை தொட்டியில் வீசி விட்டு சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். 5 மாதமே கருவில் இருந்த பச்சிளம் சிசு சாலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குப்பைத்தொட்டியில் யாரேனும் வீசிச்சென்றிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த கருவை நாய்கள் கடித்து வெளியே இழுத்து போட்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சட்டவிரோதமாக கலைக்கப்பட்டு கருவை யாரேனும் வீசிச் சென்றனரா எனவும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

இதே போல கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக பெரம்பூர் ரெயில் நிலையம் தலைப்பகுதி எரிந்த நிலையில் 6 மாத பெண் சிசு கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பெரம்பூர் பகுதியில் தொடர்ந்து இது போன்ற சம்பவம் நடைப்பெற்றது குறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர்.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345