Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

குன்றத்தூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் அவலநிலை

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் குட்பட்ட குன்றத்தூரில் உள்ள சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1400 க்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் நிலையில் கழிப்பறை வசதி மிகவும் அவசியமாக உள்ளது. ஆனால் அங்கு உள்ள கழிப்பறை திறக்கப்படாமல் சுற்றிலும் செடிகளால் சூழ்ந்து உள்ளே செல்வதற்கு கூட வழி இல்லாமல் இருப்பதால் மாணவர்கள் திறந்த வெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் அவல நிலை இப்பள்ளியில் உள்ளது. ஆனால் இங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆண்கள் பெண்கள் என்று தனித்தனியே முறையான கழிப்பறை வசதி உள்ளது.

அதேபோல் பள்ளி வளாகத்தில் உள்ள அரசினர் ஆதிதிராவிட மாணவர் விடுதியில் 45 மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர் என்று கூறுகின்றனர். ஆனால் 15 மாணவர்களே தங்கியுள்ளனர் என்பது உண்மை நிலை.

பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் இல்லாததால் பகலில் பள்ளியின் மைதானம் மாடுகளுக்கு மேய்ச்சல் மைதானம் ஆகவும், இரவு நேரங்களில் சமூக விரோதிகளுக்கு விபச்சார விடுதி ஆகவும், மது பான பிரியர்களுக்கு மது அருந்தும் இடமாகவும் பயன்பட்டு வருகிறது.

பள்ளி வளாகத்திலேயே அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்திற்காக சாலை அமைத்து வருகின்றனர்.

இப்பள்ளியில் மழைக்காலங்களில் மழைநீர் செல்வதற்கு வடிகால் வசதி இல்லாததால் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

இந்த நிகழ்வுகள் எதையும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் கண்டுகொள்வதில்லை என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.

பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் உள்ள யாருடைய குழந்தைகளும் இப்பள்ளியில் பயிலவில்லை. இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் இருக்க வேண்டும் என்பதே கட்டாயம் ஆனால் இங்கே இப்படி ஒரு சூழ்நிலை இல்லை என்பதே எதார்த்தமான உண்மை.....

(பேட்டி):
1) கணபதி, குன்றத்தூர்.
2) முருகன், குன்றத்தூர்.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘யாதும்...

சோழவரம் ஒன்றியம் அலமாதி ஊராட்சியில் வார்டு மறுகரையில் முறைகேடு உள்ளதாக கூறி...

பொது சிவில் சட்ட வழக்கு: டில்லி ஐகோர்ட் விசாரிக்கிறது! பாலின சம உரிமைக்கும்,...

சித்தர்களும், யோகிகளும் பல்வேறு யாகங்கள் செய்து தவ வலிமைகள் பெற்றனர். முற்கால...

அனைவருக்கும் மிக பிடித்தமான பருவம் உடலிலும் மனதிலும் மாற்றங்களை ஏற்படுத்தும்...

12345