Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

குவியும் பாராட்டுகள்...! ஓடி ஒளியும் கம்னாட்டிகள்!!

திருவள்ளுர் மாவட்டத்தில் வசிக்கும் முன்னாள் அரசு ஊழியரான எஸ்.மணிமொழியன் தேர்ந்தெடுத்த குறுக்கு வழி வருமான முறை தான் இன்று அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அதுதான் பீபள் பாரம் ஆஃப் இந்தியா என்ற பெயரில் மெகா மோசடி. இது மறைந்த முன்னாள் பிரதமர் நேரு உருவாக்கிய அமைப்பு. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி மெகா மோசடி வேலையை செய்திருப்பது தான் அனைவரையும் கதிகலங்கச் செய்துள்ளது.

இதனால் அரசு பெயர் கெடுவதை விரும்பாத நிகழ்காலம், புலனாய்வு டீம் செய்திவடிவில் முதலில் வெளிச்சம்போட்டு காட்டியது.

இதனால் ஆத்திரம் அடைந்த டூபாக்கூர் நேஷனல் சேர்மேன் மணிமொழியன், ஸ்ரீநிவாசன், ஸ்ரீபன் போன்றவர்கள் நண்பர்கள் மூலம் மறைமுகமாக ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்து எச்சரித்தனர்.

கடந்த 30 வருடங்களில் மட்டும் சுமார் 35ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிகளை குறிவைத்து அரசு போலி ஐடி கார்டு வழங்கி பல கோடி சுருட்டியுள்ளனர்.

தொடர்ந்து நிகழ்காலம் துணிந்து செய்தி மூலம் அம்பலப்படுத்தியதால் உள்ளுர் போலீஸ் அதிகாரிகள் விழித்துக்கொண்டனர். விரைவில் அதிரடி ஆப்ரேஷன் நடைபெறலாம் என்கின்றனர் காவல்துறை வட்டாரங்கள். இது தான் தற்போதைய ஹைலைட் நியூஸ்!

திருவள்ளுர், திருவெற்றியூர், தாம்பரம், சென்னை, ஆந்திரா, ஹதராபாத், கேரளா, நியூ தில்லி என அனைத்து இடங்களிலும் அலுவலம் உள்ளது என்றும், தனக்கு மிகப்பெரிய அதிகாரிகள் நெட்வொர்க் உள்ளது என்றும், இந்த அமைப்பிற்கு நாங்கள் தான் தலைவர்கள் என்று சொல்கிறார்கள் இவர்கள்.

இவர்களிடம், ஏமாந்தவர்கள் காவல்துறையில் புகார் கொடுக்க சென்றால், தானும் போலீஸ் பிடியில் மாட்டிக்கொள்வோமோ என்று வழிதெரியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த கும்பலிடம் ஐடிகார்டு பெற ஒவ்வொருவருக்கும் தனி ரேட்டாம், சாதாரண உறுப்பினருக்கு பத்தாயிரம் முதல் உயர் பொறுப்புக்கு பதினைந்து லட்சம் வரை வசூல்செய்யப்படுமாம். இது மத்திய அரசால் வழங்கப்படும் கௌரவம் என்று ஏமாந்தவர்கள் ஏராளம்.

மாஜி மணிமொழியனுக்கு ஸ்ரீநிவாசன், ஸ்டீபன் ஆகிய இருவரும் முதுகெலும்பாக உள்ளனர். இந்திய அளவில் மெகா மோசடி அரங்கேறுவதற்கு காரணகர்த்தாக்கள் இவர்கள் இருவருமே!

மத்திய அரசு ஐடிகார்டு விற்பது எப்படி?
முதலில் ஓரளவு அன்றாடம் பணம் புரளும் அப்பாவி ஜனங்களை அணுகுகின்றனர். ஆளை தேர்வு செய்து விட்டு, அவரிடம் நைசாக பேச்சு தருவர். இந்த ஒரு ஐடி போதும் காவல்துறை கூட அஞ்சும், நீங்கள் உங்கள் விசிடிங் கார்டில் அரசு சின்னம் போடலாம் என கதை அளந்து விடுவர்.

வாய் ஜாலம் தான் மூலதனம். ஒண்ணுமில்ல, வெறும் 10 ஆயிரம் ரூபாய் முதலீடு. இதை கொடுத்திட்டா இரண்டு நாட்களில் ஐடிகார்டு உங்க கைக்கு வந்துவிடும் என்பார்கள்.

இதேபோல், உங்கள் நண்பர்கள், உறவினர்களை சேர்த்தால் உங்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படும் என ப்ரெயின் வாஷ் செய்து கவர்ச்சிகரமான அம்சங்களை கூறி வாயில் எச்சில் ஊற வைப்பார்கள்.

இதுபோல, 200 பேருக்கு மேல் சேர்த்தால் மாவட்ட பொறுப்பு வழங்கப்படும். நீங்கள் விரைவில் வி.ஐ.பி ஆகிவிடலாம். நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு நபரிடமிருந்தும் சிறு சிறு கமிஷன்கள் பெறலாம் என்பார்கள்.

நீங்கள் நம் அமைப்பிற்காக உழைத்தால் ஊதியம் அதிகரிக்கும், விரைவில் பல கோடிகள் உங்கள் கைகளில் புரளும் என மூளைச்சலவை செய்வார்கள்.

இவ்வாறு, ஏஜெண்ட்கள் மூலமும் ஒவ்வொரு உறுப்பினரிடம் பெறப்படும் ரூ.10ஆயிரம் ஒன்றாக சேர்த்து தலைமையுடன் சேர்ந்து ஸ்டீபனும், ஸ்ரீநிவாசனும் பங்குபோட்டு கொள்வார்கள். இந்த பணம் அவ்வளவுதான் சுவாஹா!

அப்பாவி ஜனங்கள் இந்த போலி அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு பைத்தியமாக திரிவதை. நமது நிகழ்காலம் செய்தி எதிரொலித்த பின்பு தான் என்கின்றார் சமூக ஆர்வலர் பாலாஜி.

உழைத்து சேர்த்த பணத்தை மோசடி பேர்வழிகளிடம் கொடுத்து ஏமாந்து விட்டு புலம்புவது தான் வேதனை.

இதற்கிடையில், திருவள்ளர், சென்னை காவல்துறையினரும், உளவுத்துறையினரும் மாறு வேடங்களில் நேஷனல் சேர்மேன் மணிமொழியனையும், அவரது கூட்டாளிகள் ஸ்ரீநிவாசன், ஸ்டீபன் வீட்டை மோப்பம் பிடித்து வருகின்றனர்.

மாநகர அளவிலான காவல்துறை உயரதிகாரிகளும் தடாலடி ஆக்ஷன்களை எடுத்து, டூபாக்கூர் கம்னாட்டிகளை கைது செய்து, கைவிலங்கு மாட்ட உரிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.

உரிய ஆதாரங்கள் கிடைத்ததும் சாட்சியங்களுடன் மணிமொழியன் மற்றும் கூட்டாளிகள் எந்நேரமும் வசமாக மாட்டுவார்கள் என்கின்றனர் காவல்துறை உயரதிகாரிகள்.

மத்திய அரசு சின்னமான சிங்கத்தை பயன்படுத்தி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் மோடி அரசு கைவிட்ட அமைப்பினை பயன்படுத்தி முப்பதாயிரம் பேருக்கு மேல் அரசு போலி ஐடி கார்டு வழங்கியதற்காக உளவுத்துறை போலீசாரும் களத்தில் மறுபுறம் குதித்துள்ளனர்.

இதனால் இவர்களுக்கு துணை போன விஜபிகள் கதிகலங்கியிருப்பதுதான் கூடுதல் தகவல்.

முதல்வர், துணை முதல்வர், உள்ளுர் பிரமுகர்கள், உள்ளுர் காவல்துறை, வருமான வரித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறையினர் என, பல கட்ட வளையங்களில் மாட்டியுள்ளது இந்த கும்பல். பீதியில் தூக்கத்தை தொலைத்து வருகிறது.

கடந்த 35 ஆண்டுகளாக யாருக்கும் சந்தேகம் எழாமல் நமது நிகழ்காலம் புலனாய்வு டீம்மிடம் சிக்கிய இவ்விஷயம் உள்ளூர் மீடியா நபர்களிடமும், வாட்ஸ் அப், முகநூலில் வெகுவேகமாக காட்டுத்தீ போல மர்ம நபர்கள் பரவ விட்டுள்ளனர்.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345