Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு என்ன செய்வது?

ஆப்பிரிக்க நாடுகள் ஏற்கெனவே உள்நாட்டுப் போர்களாலும் பசி, பட்டினியாலும் சிதைந்தும் சீரழிந்தும்போயிருக்கின்றன. இந்த நேரத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு நிகழ்ந்திருப்பதால் பல கோடிக் கணக்கானோர் பட்டினிக்குத் தள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது. போர்களால் செயலிழந்துபோன அரசு நிர்வாகங்கள், வெட்டுக்கிளி படையெடுப்பைத் தடுக்கும் நிலையில் இல்லை.

வெட்டுக்கிளிகளின் படையெடுப்புகளுக்குப் பேசப்படும் தீர்வுகள் பல்வேறு காலங்களிலும் பல விஷயங்களை முன்வைத்தாலும் உள்ளபடி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முழுமுற்றான வழிமுறை என்று ஒன்றில்லை.

இப்போதும், ‘வெட்டுக்கிளிகள் சிறகு முளைக்காத நிலையில் உள்ளபோதே அவை கூட்டம் கூட்டமாக எங்கு இருக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்; மழை பெய்து தாவரங்கள் முளைக்கத் தொடங்கிய இடங்களை செயற்கைக்கோளின் உதவியுடன் கண்டுபிடித்து, அங்கெல்லாம் பூச்சிக்கொல்லிகள் தெளிக்க வேண்டும்’ என்றெல்லாம் பேசப்படுகின்றன.

ஆனால், எது ஒன்றும் எளிதல்ல. இப்படிப் பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதிலும் பெரிய சிக்கல் இருக்கிறது. அதனால் நிலமும் மக்களும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். ஆகவே, உயிரி பூச்சிக்கொல்லிகளைப் பற்றி யோசிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இதற்கிடையே ஐநாவுக்கான ‘உணவு மற்றும் விவசாய அமைப்பு’ வெட்டுக்கிளிகளின் படை யெடுப்பைச் சமாளிப்பதற்காக இந்திய மதிப்பில் சுமார் ரூ.500 கோடியை அமெரிக்காவிடம் கோரியுள்ளது. என்னதான் நடவடிக்கைகள் எடுத்தாலும் திரண்டுவரும் வெட்டுக்கிளிகளைச் சமாளிப்பது சிரமம்தான் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

அவை தங்கள் வேட்டையை ஆடிவிட்டுத்தான் செல்லும். அப்படி ஆடிவிட்டுச் செல்லும்போது, வெட்டுப்பட்டுக் கிடப்பவை பயிர்களும் ஏனைய தாவரங்களும் மட்டுமல்ல... பல கோடிக்கணக்கானோரின் வாழ்க்கையும்தான்.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345