Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

தள்ளாடும் ஆப்பிரிக்கா

தற்போதைய வெட்டுக்கிளி படையெடுப்பு செங்கடலை ஒட்டிய பகுதிகளிலிருந்தும் யேமன், ஓமன் ஆகிய நாடுகளிலிருந்தும் தொடங்கியது. வெட்டுக்கிளிகள் பல்கிப் பெருகுவதற்குப் புயலும் அதனால் ஏற்படும் மழையும் பெரும் உதவிபுரிகின்றன. அதுவும் முக்கியமாகப் பாலைவனப் பகுதிகளில் புயலுக்குப் பிந்தைய மழையில் தாவரங்கள் துளிர்க்கத் தொடங்குகின்றன. அந்தப் பிரதேசங்கள்தான் வெட்டுக்கிளிகள் அதிக அளவில் உருவாவதற்குத் துணைபுரிகின்றன.

இப்படி 2018-லிருந்து 2019 வரையிலான குளிர்காலத்தில் யேமனிலும் ஓமனிலும் மழைபெய்து வெட்டுக்கிளிகளின் பெருக்கத்துக்கு வழிவகுத்தது. அங்கிருந்து புறப்பட்ட வெட்டுக்கிளிகள், மேற்கே செங்கடலைத் தாண்டி ‘ஆப்பிரிக்காவின் கொம்பு’ என்று அழைக்கப்படும் சோமாலியா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பகுதிக்குப் புலம்பெயர்ந்தன.

பிறகு, ஜபூடி, எரித்ரியா, தெற்கு சூடான், உகாண்டா, கென்யா பகுதிகளில் ஊடுருவி டான்சானியா வரைக்கும் தற்போது வந்துவிட்டன. மேற்கில் இப்படியென்றால் கிழக்கே, பாகிஸ்தான் வரை வெட்டுக்கிளிகள் படையெடுத்துவிட்டன. இந்தியாவில் ராஜஸ்தான், குஜராத் வரை வந்துவிட்டன.

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு என்பது புதிய விஷயம் அல்ல. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து நிகழ்ந்துவரும் ஒன்றுதான். ஹோமரின் ‘இலியட்’ காவியத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு பற்றிய குறிப்பு வருகிறது. அதேபோல் விவிலியத்திலும் பின்னாளில் குர்ஆனிலும் வெட்டுக்கிளிகள் இடம்பெற்றிருக்கின்றன.

வரலாறு நெடுக வெட்டுக்கிளிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். 1900-க்குப் பிறகு, இதுவரை ஆறு முறை மிக மோசமான பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுப்பு நிகழ்ந்திருக்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டில் எடுத்துக்கொண்டால் 1926-1934, 1940-1948, 1949-1963, 1967-1969, 1986-1989 ஆகிய ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது நிகழ்ந்திருப்பதுதான் மிக மோசமான வெட்டுக்கிளிகள் படையெடுப்பு என்கிறார்கள்.

பாலைவன வெட்டுக்கிளிகள் காற்றின் ஓட்டத்தில் பறக்கக்கூடியவை. ஒரு மணி நேரத்தில் சுமார் 20 கிமீ தொலைவைக் கடக்கக்கூடியவை. ஒரு நாளில் ஏறக்குறைய நூறு கிலோ மீட்டர் தூரம் வரை வெட்டுக்கிளியால் கடக்க முடியும். தனி வெட்டுக்கிளியாக இருக்கும்போது அதன் பறக்கும் திறனும் கடக்கும் தொலைவும் மிகக் குறைவாக இருக்கும்.

கூட்டமாகச் சேர்ந்தால்தான் அது அசுரத்தனமான உத்வேகம் பெறுகிறது. எடுத்துக்காட்டாக, 1988-ல் ஒரு வெட்டுக்கிளி கூட்டம் மேற்கு ஆப்பிரிக்காவுக்கும் கரீபியன் தீவுகளுக்கும் இடையிலான 5,000 கிமீ தொலைவைப் பத்தே நாட்களில் கடந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, தனிப்பட்ட வெட்டுக்கிளி இரவில் பறக்கும் என்றால், கூட்டமாகச் சேர்ந்த வெட்டுக்கிளிகள் பகல் நேரத்தில் பறக்கும்.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345