Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

வெட்டுக்கிளிகளின் வாழ்க்கை

பாலைவன வெட்டுக்கிளிகளின் ஆயுட்காலம் மூன்றிலிருந்து ஐந்து மாதங்கள் வரை என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இவற்றின் வாழ்க்கைச் சுழற்சி மூன்று கட்டங்களால் ஆனது. முட்டை, இளம்பூச்சி, வளர்ந்தது. ஒவ்வொரு பெண் வெட்டுக்கிளியும் ஒரு தடவைக்கு நூறு முட்டைகளுக்கும் மேல் இடும்.


ஒரு பெண் வெட்டுக்கிளி தன் ஆயுட்காலத்தில் மூன்று முறை முட்டையிடும். இந்தக் கணக்கை வைத்துப் பார்க்கும்போது அவற்றின் இனப்பெருக்கத்துக்கு உகந்த மழைக்காலத்தில் வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.


வெட்டுக்கிளிகள் படையெடுக்காத காலகட்டம் ‘அமைதிக் காலம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் காலத்தில் ஓரளவு தரிசாகவும், பாலைவனமாகவும் உள்ள ஆப்பிரிக்கப் பகுதிகளிலும் ஆப்பிரிக்காவுக்கு அருகிலுள்ள ஆசியப் பகுதிகளிலும் வெட்டுக்கிளிகள் தங்கிவிடுகின்றன.


இது 30 நாடுகளையும் 1.6 கோடி சதுர கிமீ பரப்பையும் உள்ளடக்கியது. ஆனால், மழை பெய்து அவற்றுக்கு உகந்த தட்பவெப்ப நிலை ஏற்பட்டால், வெட்டுக்கிளிகள் 2.9 கோடி சதுர கிமீ பரப்பளவுக்குப் பரவக்கூடியவையாகும். இது 60 நாடுகளை உள்ளடக்கும். இந்தச் சமயத்தில் உலக மக்கள்தொகையில் 10%-ன் வாழ்வாதாரத்தை வெட்டுக்கிளிகள் பாதிக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.


நூறு கோடி பூச்சிகள் சுமார் 20 சதுர கிலோமீட்டர் பரப்பளவை ஆக்கிரமிக்கும். இந்தப் படை ஒவ்வொரு நாளும் 20 லட்சம் கிலோ பயிர்களை உட்கொள்ளக்கூடியவை. சிறிய அளவிலான வெட்டுக்கிளிகளின் படைகூட 35 ஆயிரம் பேர் ஒரு நாளைக்கு உட்கொள்ளக்கூடிய அளவு உணவை உட்கொள்கிறது.


இதுவரை வடகிழக்குப் பகுதியில் 5,000 சதுர கிமீ பரப்பளவில் பயிர்கள் நாசமாகியிருக்கின்றன. கென்யாவில் படையெடுத்த வெட்டுக்கிளிகளின் கூட்டம் 100 சதுர கிமீ அளவு கொண்டது.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345