Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

சந்திரபாபு நாயுடு மீது ரோஜா தாக்கு

ஆந்திரா தலைநகர் தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை நகரி தொகுதி எம்.எல்.ஏ ரோஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.


ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள நடிகை ரோஜா தனது அறக்கட்டளை சார்பாக பொங்கல் விழாவை கொண்டாடினார்.


கோலாட்டம் உள்ளிட்ட கலை நிழ்ச்சிகளும் நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நடிகை ரோஜா பரிசுகள் வழங்கினார்.


பின்னர் நடிகை ரோஜா பேசியதாவது:-


ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் அமைத்தால் மாநிலம் முன்னேறும். தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது கட்சியினர் அமராவதியில் தலைநகர் அமையும் என கருதி அங்கு 4 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வாங்கி உள்ளனர். அதனால்தான் தலைநகரை மாற்றக்கூடாது என்கின்றனர்.


சந்திரபாபு நாயுடு மக்கள் நலனுக்காக போராடவில்லை. தனதுசொந்த நலனுக்காகத்தான் போராடுகிறார். 3 தலைநகரங்கள் அமைந்தால் மாநிலம் முழுவதும் வளர்ச்சி அடையும். எனவே 3 தலைநகரங்கள் அமைக்க மக்கள் ஆதரவு தர வேண்டும்.


ஜனசேனா தலைவர் பவன்கல்யாண், சந்திரபாபு நாயுடுவின் தத்துப்பிள்ளை போல செயல்படுகிறார். அவருக்கென்று ஒரு கொள்கை இல்லை. இவர்கள் இருவராலும் மாநிலத்துக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. தெலுங்கு தேசம் கட்சி எதற்காக தேர்தலில் தோல்வியை தழுவியது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


இவ்வாறு அவர் பேசினார்.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஆந்திரா தலைநகர் தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை...

வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘யாதும்...

சோழவரம் ஒன்றியம் அலமாதி ஊராட்சியில் வார்டு மறுகரையில் முறைகேடு உள்ளதாக கூறி...

பொது சிவில் சட்ட வழக்கு: டில்லி ஐகோர்ட் விசாரிக்கிறது! பாலின சம உரிமைக்கும்,...

சித்தர்களும், யோகிகளும் பல்வேறு யாகங்கள் செய்து தவ வலிமைகள் பெற்றனர். முற்கால...

12345