Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

சோழபுரம் மண்ணின் மாபெரும் கவுரவும் தொழிலதிபர் பூ.வேல்ராஜ்!

தொழில் சக்கரவர்த்தியாக உருவெடுக்க முடியும் என்ற நம்பிக்கையை எட்டிப் பிடித்த சாகசம் அவருக்குக் கை வந்தது. அவர் பெற்ற வெற்றிகளின் அடிப்படை ரகசியம் என்ன? 100% உழைப்பை வழங்கினால் தான் தொழிலில் வெற்றி உருவாகும். அத்தோடு நின்றுவிட முடியுமா? தொடர் வெற்றி என்பது நிற்காத உழைப்பால் தான் சாத்தியமாகும் என்கிறார் பூ.வேல்ராஜ்.

சங்கத் தலைவராக பொறுப்பேற்றுத் திறம்படச் செயலாற்றியவர், நிறுவனத்தின் லாபத்தில் கணிசமான பகுதியை சமூகப் பொறுப்பு சார்ந்த விஷயங்களுக்காகச் செலவிடுபவர். ஏழைகளிடம் பாசம் கொண்டவர், ஆன்மீகச் செம்மல் என பல பரிமானங்களைக் கொண்டவர்.

சோழபுரம், ஆ.பூமிகாத்த நாடார் & சொர்ணம்மாள் தம்பதிகளுக்கு 1942ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ந்தேதி ஒரே மகனாக பிறந்தார் பூ.வேல்ராஜ் அவர்கள். இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.யூ.சி. படித்தார். இவர் சிறு வயது முதலே நேர்மைக்கும், உழைப்புக்கும் சொந்தக்காரர் என்ற பட்டம் பெற்றவர். தனது, கடினமான உழைப்பின் மூலம் இரண்டு மளிகைக் கடைகளுக்கு சொந்தக்காரர் ஆனார்.

இவரது உழைப்பையும், வளர்ச்சியையும் கண்டு வியந்தனர் உறவினர்கள். கடந்த 1965ம் ஆண்டு விருதுநகர் பி.பி.எம்.ரத்தினசாமி நாடார், நாகமணி அம்மாள் மகள் பிரேமாவதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தனலட்சுமி, சரஸ்வதி, சந்திரா, சொர்ணலதா என்ற நான்கு மகள்களும், தனபால் என்கின்ற ஒரு மகனும் உள்ளனர்.

1977ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் பெட்ரோலியம் விற்பனையாளராக தனது பணியை தொடர்ந்த பூ.வேல்ராஜ் அவர்கள் கடினமான சூழ்நிலையையும் கடந்து 42 ஆண்டுகள் ஜொலித்து வருகிறார்.
1980ம் ஆண்டு வில்லிவாக்கம் வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின் சங்கத்திற்கு தேவையான சொத்து சேர்க்கும் முயற்சியில் வில்லிவாக்கம் சண்முக நாடார் நடத்தி வந்த எண்ணெய் மில்லை விலைக்கு வாங்கி திருமண மண்டபமாக மாற்றி மிகக் குறைந்த விலையில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
அதில்வரும் வருவாயில், ஊனமுற்றவர்களுக்கு 5 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை வழங்கி தான் வகித்த பொறுப் புக்கும், சங்கத்திற்கும் பெருமை சேர்த்தார் பூ.வேல்ராஜ்.

இவரது அயராத உழைப்பினால் வில்லிவாக்கம் நாடார் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்று சங்கத்திற்கு வருவாய் ஈட்டும் வகையில் வி.ஜி.பி. நெடுஞ்சாலையில் இடம் வாங்கி அதனை வர்த்தக பிரிவுகளாக பிரித்து சங்கத்திற்கு வருவாய் அதிகரிக்க வழிவகை செய்து எந்த வித பந்தா, விளம்பரம் இல்லாமல் எளிமையாக சாதித்து காட்டியவர் என்ற பெருமை பூ.வேல்ராஜ் அவர்களையே சாரும்.

1987-&88ல் அயன்புரம் நாடார் உறவின்முறை சங்கத்தில் தலைவராக பணியாற்றியதிலிருந்து, 1995ல் நாடார் ஜாதியை மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் சேர்ப்பதற்காக சென்னைவாழ் நாடார்கள் சங்கம் சார்பில் ழி.ஷி.றி. பாண்டியன் அவர்களுடன் இணைந்து மஹாஜனம் சங்கத்தில் செயலாளர் கரிக்கோல் ராஜ் உடன் ஒரு வாரம் விருதுநகர் பகுதியைச் சுற்றி கணக்கெடுப்பில் ஈடுப்பட்டார்.

நாடார் சமூகத்திற்கு பெறுமை சேர்த்தவர். சமூக பணி, ஆன்மிகப் பணி என இவரது பணி அனைத்து துறையிலும், தன்னலமில்லாத பணியாற்றி முத்திரை பதித்து வருகிறார் தொழிலதிபர் பூ.வேல்ராஜ்.

தி.நகர், பாண்டியன் வீதியில் அமைக்கப்பட்டுள்ள உ.பு.அ. சவுந்தரபாண்டியனார் சிலை அமைக்கவும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் திறக்கப்பட சங்கத்தில் சிறப்பாக பணியாற்றி, அன்று முதல் இன்று வரை சிலை பராமரிப்புக்கு அமைக்கப்பட்ட உ.பு.அ. சவுந்தரபாண்டியன் நினைவு அறக்கட்டளைக்கு தலைவராக பொறுப்பேற்று தினசரி சிலைக்கு மாலை அணிவித்து, ஆண்டுதோறும் பராமரித்தும் பணிகளை உடன் உள்ளவர்களுடன் இணைந்து சிறப்பாக செய்து வருகிறார்.

தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை உருவாவதற்கும், வணிகர்தினம் உருவானதற்கும் 4 சங்கங்களுடன் இணைந்து பூ.வேல்ராஜ் அவர்களின் பங்களிப்பும் உள்ளது. இதனை பேரவைத் தலைவர் வெள்ளையனும் நன்கு அறிவார் என்கின்றனர் மூத்த சங்க நிர்வாகிகள்.

தூத்துக்குடி மீனாட்சிபுரத்தில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோவில் நிர்வாகக்குழு தலைவராகப் பொறுப்பேற்று கோவிலை சிறப்புறக் கட்டி முடித்து கும்பாபிஷேகம் செய்துள்ளார். அந்த கோவிலின் ஈசான மூலையில் விநாயகருக்கு மண்டபம் அமைத்து சிலை நிருவி அவரது தாய், தந்தையரின் நினைவாக அங்குள்ள விநாயகருக்கு சொர்ணபூமி விநாயகர் என பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

1996ல் மஹாஜனம் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராக இவரும், இவரது மகனும் இணைந்துள் ளனர். கி.க்ஷி.ஷி.மாரிமுத்து அறிவுறுத்தலின் பேரில் அயன்புரம் நாடார் உறவின்முறை சங்க நிர்வாகிகள் மூன்று பேரை மஹாஜன சங்கத்தின் நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற அமைந்ததற்கும் இவரது பங்கு உண்டு. மேலும், சென்னை பாடி, டி.வி.எஸ், வ.உ.சி., மக்கள் சங்கத்தில் கௌரவத் தலைவராக பொறுப்பேற்று உறுப்பினர்களின் மறைவிற்கு ரூ.5000 நிதி உதவி வழங்கி வருகிறார்.

ஸ்ரீ நல்லழகு தொழில் நுட்பக் கல்லூரி மற்றும் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை நிர்வகிக்கும் ஸ்ரீ காமராஜ் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் அறங்காவலராக உள்ளார். 2019 முதல் நிகழ்காலம், புலனாய்வு மாத இதழின் கௌரவ ஆலோசகராக உள்ளார்.

பெருந்தலைவர் காமராஜர் வழியில் ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்விக்கு உதவிட வேண்டுமென்ற எண்ணத்தில் ஒரு பயற்சி நிலையம் ஏற்படுத்தி ஏழை மாணவர்களுக்கு கல்வி பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளார். அதனை இவரது மருமகள் த.ஷீலா தேவி பொறுப்புடன் கவனித்து வருவதில் பெருமிதம் கொள்கிறார் பூ.வேல்ராஜ் அவர்கள்.

நீங்கள் நல்லவராக இருந்தால் மட்டும் போதாது. வல்லவராகவும் இருக்க வேண்டும். எல்லாவற்றையும் விட நேர்மையான முறையில் தொழில் செய்வது முக்கியம். பூ.வேல்ராஜ் முயற்சி செய்தார், கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தினார். இன்று யாரும் எட்டிப்பிடிக்க முடியாத இலக்கை அடைந்துள்ளார்.

அதற்காக உழைப்போம். வாழ்வு வசப்படும்!

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345