Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.


விளக்கம்:
மனத்துள் எதையும் வெறுக்காமல், வெளியே வெறுத்தவர் போல் ஏமாற்றி வாழும் மனிதரைக் காட்டிலும் கொடியவர், இவ்வுலகத்தில் இல்லை.


"எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே... அவர், நல்லவர் ஆவதும், தீயவர் ஆவதும், அன்னை வளர்ப்பினிலே..." என்ற பாடலை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அன்றே பாடியுள்ளார். இப்பாடல் நாம் எழுதிய இக்கட்டுரைக்கு பொருத்தமானது...


நிகழ்காலம் மாத இதழ், எதுவரினும் அஞ்சோம்! எமக்கு தேவை நீதி!! என்ற முழக்கத்துடன் செய்திகளை துணிந்து, வழங்கி வருகிறது என்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். இதன் மூலம், கயவர்களின் முகத்திரையை கிழித்து, செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, வில்லவன் பப்ளிகேஷன் குழுமத்தின் மூலம் இணையம் வாயிலாகவும், அச்சுப் பிரதிகளின் வாயிலாகவும் வெளியிட்டு வருகிறோம்.


வாசகர்கள் வழங்கிய பெரும் ஆதரவையொட்டி ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். தொடர்ந்து ஆதரவளித்து வரும் வாசகர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள். நிகழ்காலம் மாத இதழ் தொடர்ந்து செய்தி சேவையை மட்டுமே வழங்கி வந்தாலும், பொறுப்புடன் சமூகப் பணியாற்றும் பல நல் உள்ளங்களை ஊக்குவித்தும், பாராட்டியும், கௌரவித்தும் வருகிறது.


இதன்மூலம் வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள், சமூகநல அமைப்புகள், காவல்துறை நண்பர்கள், ஊடக சங்கத் தலைவர்கள், ஊடக நண்பர்கள், திரைநட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் என அனைவரிடத்திலும் நட்பு பாராட்டுவது வாடிக்கை. நம்முடன் பயணிக்கும் ஒரு சில சமூக விரோதிகள் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி முக்கிய பிரமுகர்களின் பெயரையும், நிகழ்காலத்தின் பெயரையும் சீர்குலைக்க நினைப்பது வேடிக்கை.


இதற்கு உதாரண நிகழ்வு தான் சமீபத்தில் நடைபெற்ற எலைட் சரவணா ஸ்டோர் உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்த நிகழ்வு. இதில் ஐந்து வழக்கறிஞர்கள் பாதிப்புக்குள்ளான நிகழ்வு, காவல்துறையின் துரித நடவடிக்கையால் கும்பலின் தலைவன் தனசேகரின் அதிரடி கைதும், தனசேகர் போன்ற கயவர்களின் முகத்திரையை கிழிக்க நிகழ்காலம் அஞ்சாது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.


இதுவரை நிகழ்காலம் யாரிடத்திலும் நன்கொடை பெற்றதில்லை. யாரையும் மிரட்டி பணம் பறித்தது இல்லை. விளம்பரத்தின் மூலம், சந்தா மூலம், விற்பனை மூலமுமே தொடர்ந்து இன்று வரை பயணித்து வருகிறது.


அரசுவேலை, கல்லூரி சீட்டு, டிரான்ஸ்பர், சிபாரிசு என்று யாரிடத்திலும் நிகழ்காலம் தலைகுனிந்து நின்றதில்லை. நிகழ்காலத்தில் பணியாற்றும் நிருபர்கள் யாரேனும் இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டால் உடனடியாக நிர்வாக அலுவலகத்தை 7338881773 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். காவல்துறை நண்பர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் விழிப்புணர்வு அவசியம் தேவை. கருத்து சுதந்திரம் என்பது பாதிக்கப்பட்டவர்களை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்பதே ஆகும். இதுவே எழுத்து சுதந்திரத்தின் பலம்.


வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்று நிகழ்காலம். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, என அனைத்து பொறுப்புகளுடனும், நிதானமாக பயணிக்கிறது. நண்பர்களோ, உறவினர்களோ, உடன்பிறந்த சகோதரர்களோ, யாரேனும் தவறான செயல்களில் ஈடுபட்டாலும், அநீதிகளுக்கு எதிராக செயல்பட்டாலும் அவர்களின் குரல் வளையை நெறிக்க தயங்காது நிகழ்காலம்.


ஜனநாயகத்தின் நான்காம் தூணாக, பாதிக்கப்பட்ட முதுகெலும்பு உடைந்த, உடைக்கப்பட்ட அடங்கிக் கிடந்த மக்களின் போர்க் குரலாக நிகழ்காலம் திகழும். இது சமூக தீமையைச் சுட்டெரிக்கும். நிகழ்காலம் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து உங்கள் கண்களில் கனலாக, கைகளில் அனலாக எரிகிறது. இந்த திரியின் நெருப்பு என்றும் அணையாது, கைகள் மாறக் கூடும், காலங்கள் மாறக் கூடும், ஆனால் நிச்சயம் அணைந்து விடாது. அநீதியை புரட்டிப்போடும்; ஆணவத்தை உருட்டி போடும்; நீதியை நிலைநாட்டும்; நெஞ்சம் நிமிர்ந்த நேர்மை பலம் கூட்டும்.


எங்கள் நிறுவனத்தின் பெயரை களங்கப்படுத்த முயற்சிக்கும் போலிகளை நீங்கள் அடையாளம் கண்டால் அவர்களிடத்தில். நாங்கள் வழங்கிய ஆவணங்களை கேட்டு, சரிபார்த்து, தேவைப்பட்டால் நிறுவனத்தை 7338881773 எண்ணில் தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளவும். நாங்கள் நிகழ்காலத்தில் பணியாற்றும் நிருபர்களுக்கு. உரிய அடையாள அட்டை வழங்கியும், வாகன ஸ்டிக்கர், விசிட்டிங் கார்டு, பிஆர்ஓ கடிதம் ஆகியவற்றை வழங்கியுள்ளோம். அவர்கள் மட்டுமே எங்கள் நிறுவனத்தைச் சார்ந்தவர்கள்.


மாவட்டம்தோறும் ஒருவருக்கு மட்டுமே அடையாள அட்டை வழங்கி உள்ளோம். இணைய தளத்திலோ அல்லது சமூக வலைத்தளத்தில் இருந்து நிகழ்காலம் லோகோவை எடுத்து டூப்ளிகேட் கார்டு செய்து அப்பாவி பொதுமக்கள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகளை மிரட்டி வசூல் செய்யும், டுபாக்கூர்களை யாரேனும் அடையாளம் கண்டால் அருகில் உள்ள காவல்நிலையத்தில் அல்லது நிகழ்காலம் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கவும். நிச்சயம் சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


சமீபத்தில், எலைட் சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகையில் பிடிபட்ட போலி பத்திரிகையாளர் தனசேகர் வாட்ஸ்அப், சமூகவலைத்தளங்களில் பதிவிடும் நிகழ்காலம் விளம்பரங்கள், நிகழ்ச்சி அறிவிப்புகளை காட்டி பணம் பறிக்க முயற்சித்ததாக காவல்துறை நண்பர்கள் மூலம் நமது கவனத்திற்கு வந்தது.


இவர், ஜெயா டிவியில் பணியாற்றும் மோகன்ராஜ் நியூஸ் ரீடர்க்கு நெருங்கிய நண்பர் ஆவார், சமீபத்தில் நிகழ்காலம், ISWOT நடத்திய நிகழ்ச்சியில் ஆங்கரிங் செய்வதற்காக மட்டுமே மோகன்ராஜை அழைத்தோம். அவருடன் வந்த தனசேகர் தான் ஒரு பத்திரிகையாளர் சங்கத் துணைத் தலைவர் என்று எங்களிடம் அறிமுகம் செய்துகொண்டு, சென்னை ராயல் லீ மெரிடியன் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவர்னருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். நிகழ்காலத்திற்கும் இவருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.


திருப்பூர், ஈரோடு, ஊட்டி, மதுரை, புதுக்கோட்டை, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு நிகழ்காலம் யாரையும் நிருபராக நியமிக்கவில்லை. இங்கே நிகழ்காலம் பெயரை பயன்படுத்தி பணம் வசூலிப்பதாக செவிவழிச் செய்திகள் வெளியாகியுள்ளது.


வாசகர்கள், பொதுமக்கள், நண்பர்களுக்கு இது குறித்து நிகழ்காலத்தின் பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியிட்டாளர் அன்புடன் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால்... நான்... பணம் சம்பாதிப்பதற்காக இத்துறையை தேர்ந்தெடுக்கவில்லை. எத்தனையோ வாய்ப்புகள் வந்தும் புறம் தள்ளியவன். நான், எனது தந்தையின் கனவை நினைவாக்க துடிப்பவன், எனது லட்சியம், எனது உயிர், எனது மூச்சு, பணத்திற்காக விலை போவது நானும் அல்ல... எனது குழுமமும் அல்ல... எனது பேனா முனையும் அல்ல...


உதவி என்று எங்களை நாடுவோருக்கு அறிவுரை வழங்கி, உரிய உதவிகளை சட்ட ரீதியாக செயல்படுத்துபவன்... அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பவன். நீதிக்காக போராடுபவன். என்னைச் சுற்றி ஆயிரம் துரோகிகள், கேடிகள், சுயநலவாதிகள், மோசடிப் பேர்வழிகள், திருடர்கள், நயவஞ்சகர்கள் நட்பெனும் போர்வையில் பயணிக்க நினைக்கிறார்கள்.


இவர்களை நான் மதிப்பதும் இல்லை, அவர்களுக்கு, வாய்ப்பு அளிப்பதும் இல்லை. தவறு என்னும் பொழுது நிச்சயம் அவர்களின் முகத்திரை கிழிக்கப்படும். இதற்கு, நாம் முன்னே வெளியிட்டுள்ள பல கட்டுரைகளே சாட்சி.


யூனிவர்சல் பிரஸ் மீடியாவிற்கும், வில்லவன் பப்ளிகேஷன் குழுமத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. உடன் படிக்கை ஏதும் இல்லை. அதன் இயக்குநர் விஜய் ஆனந்த் 2017ம் ஆண்டு நம்மை கௌரவித்து டாக்டர் பட்டம் வழங்கினார். நட்புறவு பலப்படுத்தினாரே தவிர, அவருக்கும் அவரது செயல்பாட்டிற்கும், நிகழ்காலத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இக்கட்டுரை மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். அநீதிகளுக்கு ஆதரவாக நிகழ்காலம் என்றும் துணை நிற்காது.


வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.


விளக்கம்...
குற்றத்தால் துன்பம் வருமுன் தன்னை காத்துக் கொள்ள தவறியவரின் வாழ்க்கை தீயின் முன்னே வைத்த வைக்கோல் போலக் கெடும்.


ஆயுதங்களை கண்டு அஞ்சுபவன் நானல்ல, "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே..."

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345