Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

வருகிறார் சசிகலா.. கை கோர்க்கும் அமமுக, அதிமுக

சென்னை: வர்ற மார்ச் மாசமே ஜெயிலில் இருந்து வெளியே வர போகிறார் சசிகலா என்று பேச்சு அடிபடுகிறது. வந்ததுமே அதிமுகவில் இணைய போகிறார்.. பாஜகவுடன் கைகோர்க்க போகிறார் என்ற தகவல்களால் அரசியல் வட்டாரம் பரபரக்கிறது.


நன்னடத்தை காரணமாக சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்று சில காலமாகவே தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும், இந்த விடுதலை விவகாரத்தில் பாஜகவே தலையிட்டுள்ளது என்கிறார்கள். குறிப்பாக, சுப்பிரமணியசாமியும், சந்திரலேகாவும் இந்த விஷயத்தில் இறங்கியிருப்பதாக கூறப்பட்டது.


இது ஒரு பக்கம் இருந்தாலும், தினகரனும் இப்போது, பாஜகவையும் சரி, அதிமுகவையும் சரி, மோசமாக முன்பைபோல விமர்சிப்பது இல்லை. அதேபோல, அதிமுக தரப்பும், தினகரனை பற்றி பேசுவதை குறைத்துகொண்டுள்ளது.


சசிகலா
இது எல்லாவற்றிற்கும் மேலாக, இதுவரை பதவியேற்றது முதல், ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவருமே தங்களது ஒரு பிரச்சாரத்தில் கூட சசிகலாவை தாக்கி பேசியதே கிடையாது. இவற்றிற்கு முத்தாய்ப்பு வைத்ததுபோலவே, நேற்று நமது அம்மா நாளிதழிலும், எல்லாரும் ஒன்றுகூடி நடைபோடும் கோட்டைக்குள், சாத்தான்கள் சரசமாட முடியாது என்பது போன்ற ஒரு பதிவையும் போட்டுள்ளது.


ஒன்றிணையுமா?
இது யாருக்கு சொன்ன பதிலாக இருந்தாலும், "ஒன்றுகூடி" என்ற வார்த்தை உற்று நோக்கப்படுகிறது. அப்படியானால் சசிகலா முன்னிலையில், கட்சி ஒன்று சேரபோகிறதா, அதிமுகவுக்கு சசிகலா தலைமை பொறுப்பு ஏற்பாரா என்பதெல்லாம் வெளிப்படையாக தெரியவில்லை.


ஆளுமை
அதேநேரத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருக்கும்போது, சசிகலாவை உள்ளே வரவிடமாட்டோம் என்று சொல்ல வருகிறார்களா என்றும் தெரியவில்லை. இந்த விஷயத்தில் பாஜகவின் ரோல் முக்கியமானதாக உள்ளது. அதிமுகவுக்கு சசிகலாவை போல ஒரு ஆளுமை தேவை என பாஜக நினைப்பது உண்மையே. அப்படி ஒரு ஆளுமை இருந்தால்தான் வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் வலுவாக தமிழகத்தில் வசதியாக இருக்கும் என்பதும், குறைந்தது 25 சீட்டையாவது பிடித்துவிடலாம் என்பதும் பாஜகவின் கணக்காக உள்ளதாக தெரிகிறது.


விடுதலை
தினகரன் சம்மதித்தால் சிறையில் இருக்கும் சசிகலாவை சட்ட ரீதியாகவே வெளியே கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளில் பாஜக தரப்பு இறங்குவதாகவும், பாஜகவின் இந்த ஐடியாவை பற்றி தினகரனும் யோசித்து வருகிறார் என சொல்கிறார்கள். ஆக.. சசிகலா விடுதலையில்கூட தாமரை மலர்வது ஒட்டிக் கொண்டுள்ளது போலும்!

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘யாதும்...

சோழவரம் ஒன்றியம் அலமாதி ஊராட்சியில் வார்டு மறுகரையில் முறைகேடு உள்ளதாக கூறி...

பொது சிவில் சட்ட வழக்கு: டில்லி ஐகோர்ட் விசாரிக்கிறது! பாலின சம உரிமைக்கும்,...

சித்தர்களும், யோகிகளும் பல்வேறு யாகங்கள் செய்து தவ வலிமைகள் பெற்றனர். முற்கால...

அனைவருக்கும் மிக பிடித்தமான பருவம் உடலிலும் மனதிலும் மாற்றங்களை ஏற்படுத்தும்...

12345