Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

லட்சியம் வெல்லட்டும்...

“எனக்கு யாரும் முன்மாதிரி இல்லை. நான் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்கவே கடுமையாக உழைக்கிறேன்!” என்று சமூக வலைதளங்களில் வனம் தன்னர்வ அமைப்பின் முகவரியை கண்டோம்.

யார் இவர்கள்? இவர்கள் என்ன செய்கிறார்கள் என்ற கேள்வி நமக்குள் எழ, நாம் அவர்களை தொடர்பு கொண்டோம்.

மரங்கள் அடர்ந்த காவிரிப் படுகை மாவட்டங்களை உருவாக்குவதை இலட்சியமாகக் கொண்டு செயல்படும் வனம் தன்னார்வ அமைப்பு தனியார் மற்றும் பொது இடங்களில் சிறு காடுகள் அமைத்தல், பனை விதைகள் விதைத்தல் ஆகிய பணிகளை செய்து முடிப்பதே எனது லட்சியம் என்கிறார் நிறுவனர் வனம் கலைமணி.

நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் வட்டம், கொழையூர் கிராமத்தில் 29.05.1976ம் ஆண்டு பிறந்தார். இவர், மயிலாடுதுறை, மன்னன்பந்தல் அன்பநாதபுரம் வகையறா அறத்துறை கல்லூரியில் தாவரவியலில் இளங்கலை பட்டமும், வனவாழ் உயிரியலில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

இவர், 2006ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் செயல்பட்ட புதுவாழ்வு திட்டத்தில் வாழ்வாதார வழி நடத்துனராக பணியில் சேர்ந்தார்.
அப்பணியில் இருக்கும் காலத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு, பசுமை கிராமமாக மாற்றியுள்ளார்.

இவர், லயன்ஸ் கிளப் ஆஃப் திருநெல்வேலி மூலம் இயற்கை பாதுகாவலர் விருது, பசுமை காவலர் விருது, பசுமை நாயகர் விருது, அப்துல்கலாம் விருது என 30க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

தனது 20 வருட அனுபவத்தில் நண்பர்களுடன் இணைந்து வனம் தன்னார்வ அமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி தனது சொந்த நிதியிலும், நண்பர்கள் உதவியுடனும் பணியை செய்து வருகிறார்.

இவரது லட்சியம், மரங்கள் அடர்ந்த காவிரிப் படுகை மாவட்டங்களை உருவாக்குவதே லட்சியமாக கொண்டு செயல்படுகிறார் வனம் தன்னார்வ அமைப்பு தலைவர் வனம் கலைமணி.

இது புங்கன் விதைகள் கிடைக்கும் காலம். மரத்தின் அடியில் விழுந்து கிடக்கும் விதைகளை சேகரித்து சாலை ஓரங்களில் வேலி ஓரங்களில் போட்டு வையுங்கள். இனி மழைக்காலம் முளைத்து மரங்களாக வாய்ப்பு உள்ளது. (விதைகள் மேல் ஓடுகளை நீக்காமல் போடுவது நல்லது)
வாழ்த்துகள்...

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345