கல்வித்தொண்டில் நடைபோடும் செந்தாமரை நிறுவனர் P.ஸ்ரீதரன்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்காவில் எகனாபுரம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் பயன்படுத்தக்கூடிய கழிப்பறைகள் கடந்த ஓராண்டு காலமாக பழுதடைந்து விட்டது இதன் காரணமாக இந்த கழிவறைகளை யாரும் சுத்தம் சேய்வது கிடையாது இதனால் மாணவர்கள் தங்களது இயற்கை உபாதைகளை கழிக்க மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதனை அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வி அவர்கள் அரசாங்கத்திற்கு கடிதம் போட்டு இருந்தார் இதனால் எந்த பலனும் கிடைக்காததால் தனியார் நிறுவனங்களின் உதவிகளை நாடினர் பிறகு வெளிச்சம் அறக்கட்டளை உதவி நாடினர் இந்த அறக்கட்டளை செந்தாமரை இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் என்ற மிக பெரிய நிறுவனத்திடம் உதவி கோரினார்கள். இதனை அறிந்த செந்தாமரை இன்ஜினியரிங் நிறுவனம் உடனடியாக மாணவர்களின் சுத்தம் சுகாதாரத்தினை கருத்தில் கொண்டு அவர்களுக்கு நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டு புதிய கழிவறைகளை கட்டி தரவேண்டும் என்று கேட்டார்கள் அதற்க்கு வெளிச்சம் அறக்கட்டளை வேண்டாம் ஐயா இந்த பள்ளிக்கு இதற்கு முன்னதாக அரசாங்கம் கட்டித்தந்துள்ள பழைய கழிவறைகளை சீரமைத்து தந்தாள் போதும் என்று கேட்டார்கள், அதற்கு அந்த நிறுவனத்தின் தலைவர் திரு.P .ஸ்ரீதரன் அவர்கள் மற்றும் அந்த நிறுவனத்தின் மேலாளர் திரு.R.சுபாஷ் அவர்களும் கேட்டது எவ்வளவு செலவாகும் எண்டு கேட்டார்கள் அதற்க்கு அறக்கட்டளை ரூபாய் 50000 கு மேல் ஆகும் என்றார்கள் அதை கேட்டதும் அந்த நிறுவனத்தின் தலைவர் உடனடியாக ரூபாய் 50000 கொடுத்து அந்த பள்ளியின் கழிவறைகளை சீரமைக்க சொன்னார்கள் மேலும் அதிகம் செலவு அதிகரித்தல் அதனை நானே தருகிறேன் என்று கூறினார்கள். இதனை பெற்றுக்கொண்ட வெளிச்சம் அறக்கட்டளை தன்னுடைய அறக்கட்டளை உறுப்பினர் B .கவாஸ்கர் அவர்களிடம் ரூபாய் 10000 அன்பளிப்பாக வாங்கி அந்த அரசு பள்ளி மாணவர்கள் பழன்படுத்திக்கொள்ள ஐந்து கழிவறைகளை நவீன முறையில் பழுதுபார்த்து கொடுத்து மாணவர்களின் சுகாதாரத்தினை காத்த செந்தாமரை இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் , வெளிச்சம் அறக்கட்டளை நிறுவனர் திரு.முருகன் அவர்களுக்கும் அந்த கிராம மக்கள், அந்த பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நன்றி கூறினார்கள். மேலும் செந்தாமரை நிறுவனத்திற்கு நன்றி கூறும் வகையில் வருகின்ற ஆஜெஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பரிந்துரைக்கப்பட்டவை
வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘யாதும்...
சோழவரம் ஒன்றியம் அலமாதி ஊராட்சியில் வார்டு மறுகரையில் முறைகேடு உள்ளதாக கூறி...
பொது சிவில் சட்ட வழக்கு: டில்லி ஐகோர்ட் விசாரிக்கிறது!
பாலின சம உரிமைக்கும்,...
சித்தர்களும், யோகிகளும் பல்வேறு யாகங்கள் செய்து தவ வலிமைகள் பெற்றனர். முற்கால...
அனைவருக்கும் மிக பிடித்தமான பருவம் உடலிலும் மனதிலும் மாற்றங்களை ஏற்படுத்தும்...