Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

டுபாக்கூர் வழக்கறிஞர் கோட்டீஸ்வரன்!

காலத்திற்கு ஏற்பவும், சமூக சூழலுக்கு ஏற்பவும் சட்ட திட்டங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பது ஜனநாயக நாட்டிற்கு அவசியமானது ஆகும்.

நீதிக்காக போராடும் வழக்கறிஞர்கள், நீதிக்காக காத்திருக்கும் வழக்காளிகள் என அனைவரும் போலி வழக்கறிஞர்களால் பாதிக்கப்படுவதும், துன்பங்கள் பல சந்தித்து வருவதும் சமீப காலமாக அதிகரித்துள்ளது.

சென்னை, கொருக்குபேட்டையில் வசிக்கும் 420 அ.கோட்டீஸ்வரன் டுபாக்கூர் வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து வசூல் வேட்டை செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று நியதி இருக்கும் போது. கோட்டீஸ்வரன் போன்ற டுபாக்கூர் வழக்கறிஞர்கள் மீது பார்கவுன்சில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கொந்தளிக்கின்றார் சமூக ஆர்வலர் சதீஷ். வழக்கறிஞர்களுக்கு ஏஜெண்டாக செயல்படும் கோட்டீஸ்வரனை கண்டு அவரது சீனியர்கள் அஞ்சுகிறார்கள் என்கிறார் பணத்தை பறிகொடுத்த சீனியர் சிட்டிசன் சுமதி (67).

இவர் பார்கவுன்சிலில் பதிவு செய்தாரா இல்லையா என்று ஒருபுறம் இருக்க, பொதுமக்களின் நலனுக்காகவும், நீதிக்காக போராடும் வழக்கறிஞர்களுக்காகவும், கோட்டீஸ்வரன் போன்ற டூபாக்கூர்களின் முகத்திரையை துணிந்து கிழிக்கும் நிகழ்காலம்.

நீதிவேண்டும் என்றால், இந்தியாவின் இறையாண்மை காக்கப்பட வேண்டும் என்றால், வழக்கறிஞர்களுக்கு ஏஜெண்டாக மாறும் டுபாக்கூர் கோட்டீஸ்வரன் போன்றவர்கள் முகத்திரையை துணிந்து கிழிக்க ஊடகங்களாலேயே முடியும் என்கிறார் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சண்முகம்.

மேலும், மணலியை சேர்ந்த மகேஷ்வரி (45) என்பவரின் சொத்து பத்திரத்தின் நகல் சரிபார்த்து தருவதாக கூறி வாய்ஜால கில்லாடி டூபாக்கூர் கோட்டீஸ்வரன் ரூ.10ஆயிரம் அபேஸ் செய்து எஸ்கேப் ஆகியுள்ளார் என்கின்றார் இவரது நண்பர் கணேஷ்.

சென்னையில் உள்ள அனைவரும் இவரது சொந்தக்காரர்கள், வி.ஐ.பி முதல் காவல்துறை அதிகாரிகள் வரை இவரது மாமா, மச்சான், அண்ணன் என்று ஏமாலிகளிடம் பீலா விடும் கோட்டீஸ்வரன் தற்போது வானகரத்தில் உள்ள மணி பிளான்ட் ஸ்மால் பிசினஸ் என்ற நிறுவனத்தில், மாத சம்பளத்தில் வேலை பார்ப்பதாக பீலா விடுகிறார் என்கிறார் அவரது மச்சான்.

கடந்த வாரம் தான் இந்நிறுவனத்தின் முகத்திரையை கிழித்து பொதுமக்களை உஷார் படுத்தியது நிகழ்காலம். இந்நிறுவனம் ஏழை, எளிய மக்களின் அறியாமையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பல கோடி மோசடி செய்துள்ளனர் என்று கட்டுரை வெளியானது.

இது பார்ட்னர் ஷிப் நிறுவனம், இதில் என் மச்சான் கோட்டீஸ்வரனும் பார்ட்னர். அங்கு, அவர்தான் லீகல் அட்வைசர். மோசடி வேலைகளை முழு நேரமாக கோட்டீஸ்வரன் மாமா செய்து வருகிறார் என்று கண்ணீருடன் விடைபெற்றார் பாசக்கார மச்சான்.

திருந்தாத ஜென்மங்கள்... இருந்தென்ன லாபம்?

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 50 ஆயிரத்தை கடந்துவிட்ட ஜெர்மனியில்,...

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் Carona வைரஸ், இதற்கு முன்பு தோன்றிய பல்வேறு...

இந்தியாவில் ஏற்கனவே எல்லாம் வணிக வளாகங்கள் மற்றும் சினிமா அரங்குகள் ஆகியவை...

உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை முப்பத்து நான்காயிரத்தை எட்டியுள்ளது....

தற்போது பரவி வரும் Sars-CoV-2 கொரோனா வைரஸ் 62-71% ஆல்கஹால் அளவுள்ள கிருமி நாசினி அல்லது...

12345