Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

முத்ரா கடன்; தமிழகத்தில் மெகா மோசடி!

வங்கிகளில் உரிமை கோரப்படாமல், கேட்பாரற்றுக் கிடக்கும் டெபாசிட் பணத்தின் அளவு 2018--&-19 ஆம் ஆண்டில் ரூ.14 ஆயிரத்து 578 கோடியாக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.


மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பூர்வ மாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:


‘வங்கிகளில் உரிமை கோரப்படாமல், கேட்பாரற்று கடந்த 2016-ம் ஆண்டில் ரூ.8 ஆயிரத்து 928 கோடி டெபாசிட் இருந்தது. இது 2017-ம் ஆண்டில் ரூ.11 ஆயிரத்து 494 கோடியாக அதிகரித்தது. 2018-ம் ஆண்டில் 27 சதவீதம் உயர்ந்து, ரூ.14 ஆயிரத்து 578 கோடியாக அதிகரித்துள்ளது.


2018&ஆம் ஆண்டில் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ வங்கியில் மட்டும் வைப்புத் தொகையாக ரூ.2 ஆயிரத்து 156 கோடியும், வாழ்நாள் காப்பீட்டுப் பிரிவில் ரூ.16 ஆயிரத்து 887 கோடியும் உரிமை கோரப்படாமல் உள்ளது.


மேலும், 2018&-19 ஆம் ஆண்டில் அரசு வங்கிகளில் மோசடி சம்பவங்களின் எண்ணிக்கையும் 739&ஆக குறைந்துள்ளது. இது கடந்த 2017-&18ஆம் ஆண்டில் ஆயிரத்து 545 ஆக இருந்த நிலையில் இப்போது குறைந்தது. கடந்த 5 ஆண்டுகளில் அரசு வங்கிகளில் மொத்தமாக ரூ.2 லட்சத்து 6 ஆயிரத்து 586 கோடி வாராக்கடன் வசூலிக்கப்பட்டுள்ளது.


10 ஆண்டுக்கும் மேலாக வங்கியில் உரிமை கோரப் படாமல் டெபாசிட் பணம் இருந்தால், அந்த தொகை டெபாசிட்தாரர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதியாக மாற்றப்படுகிறது.


ஒருவேளை அந்த வைப்புத்தொகைக்கு உரியவர் வந்து ஆதாரபூர்வமாக கேட்கும்பட்சத்தில் அந்தத் தொகையை வட்டியுடன் வங்கிகள் அளிக்க வேண்டும்.


இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


முத்ரா கடன் குறித்த கேள்விக்கு நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கையில், “முத்ரா கடன் திட்டம் தொடங்கப்பட்டு கடந்த ஜூன் 21-&ம் தேதி வரையில் ரூ.19 கோடிக்கும் அதிகமாக கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 2 ஆயிரத்து 313 மோசடி சம்பவங்கள் நடந்துள்ளன.


முத்ரா கடன் திட்டத்தில் தமிழகத்தில்தான் அதிகபட்ச மாக 344 மோசடிகள் நடந்துள்ளன. அடுத்ததாக சண்டி கரில் 275 மோசடிகளும், ஆந்திர மாநிலத்தில் 241 மோசடிகளும் நடந்துள்ளன” என அவர் தெரிவித்தார்.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓரின ஈர்ப்புடைய பெண்கள், தங்கள் திருமணத்திற் காக எடுத்த சிறப்பு புகைப்படங்கள்...

செட்டாப் பாக்ஸ் கொள்முதல் தொடர்பான டெண்டர் விவகாரம் தான் மணிகண்டன் - உடுமலை...

டிஸ்கவரி தொலைக்காட்சியில் வெளியாகும் மேன் வெர்சஸ் வைல்டு பிரபலமான நிகழ்ச்சியில்...

அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ஷிபா என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த செப்....

ஷாப்பிங் செல்லும் போது, பட்ஜெட், சைஸ், கலர் இதில் மட்டுமே பெரும்பாலான பெண்கள்...

12345