Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

எப்படி நடந்துக்கொள்கிறார்கள் பெற்றோர்கள்!

அனைவருக்கும் மிக பிடித்தமான பருவம் உடலிலும் மனதிலும் மாற்றங்களை ஏற்படுத்தும் பருவம் உடலில் பல விதமான ஹார்மோன்கள் சுரக்கும் பருவம்.


அதனால், உடலிலும் மனதிலும் ஏற்படும் மாற்றங்களை ஏற்க முடியாமல் அப்பருவத்தினர் உடலாலும், மனதாலும் தடுமாறுவர். இப்பருவத்தில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்களால் ஏற்படக்கூடிய அனுபவமே ஒரு ஆணையும், பெண்ணையும் நல்ல நிலைக்கு கொண்டு செல்லும்.


இப்பருவத்தில் அவர்களின் உணர்ச்சிகளை அது சந்தோஷம், கவலை, கோபம் எதுவாக இருப்பினும் பெற் றோர்கள் தங்களது பிரச்சனையாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் படிக்கும் இடத்தில் இருந்தே பிரச்சனை உள்ளது.


ஏதோ கல்லூரியில் சேர்த்து விட்டோம் அவர்கள் படிக்க வேண்டும் அதன் தொடர்பாக தான் அவர்களிடம் பிரச்சினைகள் இருக்கும் என்று பெற்றோர்கள் எண்ணக் கூடாது. பள்ளிப்பருவம் வரை ஆசிரியர்கள் கடிந்து கொள்வதையோ நண்பர்கள் பட்டபெயர் வைத்து அழைப்பதையோ விளையாட்டாக எடுத்துக்கொள்பவர்களே டீனேஜ் பருவத்தினர்.


ஆசிரியர்களின் கண்டிப்பும், நண்பர்களின் கேலிப் பேச்சும் டீனேஜ் பருவத்தினருக்கு மன உளைச்சலையும், தலைக்குனிவினையும் ஏற்படுத்துவதாக உணருவார்கள்.


இப்பருவத்தில் உடல் அங்கங்களிலும், ஹார்மோன் களின் சுரப்பினால் வெளித்தோற்றத்தில் ஏற்படும் மாற்றங் களினால் (தாடி, மீசை, மார்பு) தங்களை தாங்களாகவே ஒரு கதாநாயகன், கதாநாயகியாக கற்பனை செய்து கொள்ளும் அளவிற்கு மனதில் எண்ணங்கள் தோன்றும்.


அப்பொழுதுதான் தனக்கு பிடித்த நடிகரைப் போல் ஆண்களும், தனக்கு பிடித்த நடிகையை போல் பெண்களும் தங்களது நடை, உடை, பாவனைகளை மாற்றிக்கொள்கிறார்கள்.


காரணம், அதிக அளவில் அவர்களின் அறிவிற்கும், பார்வைக்கும் நடிகர் நடிகையரே ஆக்கிரமிப்பு செய்கின்றனர். அவர்களையே ரோல் மாடலாக எடுத் துக் கொள்கின்றனர். இப்படிப்பட்ட செயலினை பெற் றோர்கள் கவனித்து அவர்களுக்கு கல்வியாலும், உழைப்பாலும், உண்மையாலும், நேர்மையாலும், எளிமையாலும் உயர்ந்துள்ள அறிஞர்கள், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், தலைவர்கள், அதிகாரிகளின் வாழ்க்கை வரலாற்றினை பற்றி எடுத் துரைத்து அவர்களில் யாரையாவது ரோல் மாடலாக எடுத்துக்கொள்ளும் படியான செயலில் பெற்றோர்கள் முனைப்பினைக் காட்ட வேண்டும்.


இப்பருவத்தில் உள்ள ஆண்களுக்கு பெண் நண்பர் களும், பெண்களுக்கு ஆண் நண்பர்களும் இருப்பார்கள். அப்படி பட்டவர்களை பெற்றோரிடம் அறிமுகப்படுத்தும் போது அதனை கவனத்தில் கொண்டு அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் காதலர்களாகத் தான் இருப்பார்கள் என்று பெற்றோர்கள் தாங்களாகவே கற்பனை செய்து கொண்டு மனதினை புண்படுத்தும் வார்தைகளால் இப்பருவத்தினரை திட்டுவது என்பதினை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்.


ஏனென்றால் இப்பருவம் தான் தனக்கான நண்பர் களையும், தனக்கான ரோல் மாடல்களையும், வாழ்க்கை துணையினையும் தேர்வு செய்யத் தூண்டுதலாக அமைகிறது. இப்படிப்பட்ட பருவத்தில் அவர்கள் தேர்வு செய்யும் அனைத்துமே சரியாகத்தான் இருக்கும் என்பது அல்ல. அவர்களின் தேர்வு சரியா, தவறா என்பதினை பெற்றோர்கள் அவர்களுக்கு புரியும் படி உணர்த்த வேண்டும்.


அப்படிப்பட்ட சமயத்தில், அவர்கள் தங்களது தேர்வு சரி என்று பெற்றோர்களிடம் வாதாடுவார்கள், கோபப்படுவார்கள் அப்படிப்பட்ட சமயத்தில், பெற்றோர் கள் அவர்களிடம் சரிக்கு சரியாக வாதிட்டோ, கோபப் படுவதிலோ எந்த மாற்றமும் ஏற்படாது. அதற்கு பதிலாக அவர்களின் வாதத்தினை பொறுமையுடன் கேட்டு அதற்கான தகுந்த பதிலினைக் கூறி புரிய வைக்க வேண்டும். இதற்கு காலதாமதம் ஆனாலும் பரவாயில்லை. பெற்றோர்கள் கூறியுள்ள கருத்தினை பற்றி யோசிக்க அவர்களுக்கு நேரம் கொடுக்க வேண்டும்.


இன்றைய காலகட்டத்தில் ஆண்களையோ, பெண் களையோ அவர்களின் நண்பர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கும், நண்பர்களின் திருமணத்திற்கும் அனுப்பி வைக்கும் பழக்கம் வழக்கமாகிக் கொண்டிட்ருக் கிறது. அது கலாச்சாரமாகவே இன்று பின்பற்றப்படுகிறது.


இந்த கலாச்சாரத்திற்கு பெற்றோர்கள் ஆதரவாக இருத்தல் என்பது தவிர்க்கப்பட வேண்டும். இல்லையென்றால், நிகழ்விற்கு பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் அவர்களுடன் செல்லும் படியும் அல்லது தகுந்த துணையுடனும் செல்லும்படியான வழக் கத்தினை பெற்றோர்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.


பெற்றோர்கள் நண்பர்கள் போல அவர்களிடம் பழக வேண்டும். அவர்கள் வீட்டில் இருக்கும் நேரங்களில் உங்களிடம் செலவிடும் வகையில் இருவருக்கும் பிடித்தமான பொழுதுபோக்கி (ஹாபி) னை தேர்ந்தெடுத்து அதனைப்பற்றி விவாதிக்க வேண்டும். அது புத்தகம் வாசித்தல், நீச்சல், யோகா, மாடலிங், தோட்டக்கலை போன்ற எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.


அவர்களுடன் பயணங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் அச்சமயத்தில் பல விஷயங்களை பரிமாறிக்கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படும்.


உங்கள் பிள்ளைகள் கூறும் கருத்துக்களை செவிக் கொடுத்துக்கேளுங்கள். இன்றைய காலக்கட்டத்தில் அவர்கள் ஒரு பொருளைப்பற்றியோ, அறிவியல் நுட்பங்களை பற்றியோ பெற்றோர்களுக்கு தெரியாத கருத்துக்களை கூட அவர்கள் அறிந்து வைத்திருப்பார்கள். அதனை உணர்ந்து தெரிந்துகொள்ள ஆர்வத்தினைக் காட்டி அவர்கள் சொல்ல வரும் தகவல்களுக்கு நமது நேரத்தினை ஒதுக்க வேண்டும்.


அவர்களின் ஆசைக்கு மதிப்பளியுங்கள். புதிய ட்ரெண்டியான உடை மற்றும் சிகை அலங்காரத்தினை தாங்களும் செய்துக்கொள்ள ஆசைப்படும் போது அதனை விடுமுறை காலங்களில் அவர்கள் செய்து கொள்ள அனுமதியுங்கள்.


ஆடை விஷயத்தில் கவனமுடன் இருக்க வேண்டும்.ஆடைகள் தரமானதாக இருக்வேண்டுமே தவிர, மற்றவர்களின் கவனத்தினை திருப்பாமல் இருப்பதாக அமையவேண்டும். இது இரு பாலருக்குமே பொருந்தும். இப்பருவத்தில் காரணமே இல்லாமல் கோபமும், சந்தோஷமும் மாறி மாறிவரும். அச்சமயத்தில் நீ எப்படி என்மேல் கோபப்படுவாய் நான் உன் அம்மா, அப்பா எங்கள் மேல் கோபப்படக்கூடாது என்று அவர்களை அடக்குதலை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்.


செக்ஸ் பற்றி பேசுங்கள் அதன் அறிவியல் உண்மைகளை உணர்த்துங்கள். திட்டுதல், அடித்தல் போன்வற்றினை தவிருங்கள். அவை அவர்களுடைய சுயமரியாதையை பாதிப்பதாக உணர்வார்கள்.


இக்காலத்தில் வளர்ந்துள்ள அறிவியல் நுட்பமான சோசியல் மீடியாவினை பயன்படுத்துவதிலும் எலக்ட் ரானிக் கேட்ஜஸ்களை பயன்படுத்துவதிலும் கவனமாக கையாளவேண்டும். அதனால் ஏற்படும் நன்மை, தீமை களைப்பற்றியும் அவர்களிடம் புரியும்படி விளக்க வேண்டும்.


காலத்தின் வலிமையினை உணர்த்தவேண்டும்.இப்பருவத்தில் காலத்தினைப் பயன்படுத்தி நல்ல வழியில் முன்னேற ஆலோசனைகள் வழங்க பெற்றோர்கள் முன்வரவேண்டும். அன்பு, பாசம், மரியாதை, கடவுள் நம்பிக்கை, ஒற்றுமை, உறவின் முக்கியத்துவம் போன்ற வற்றினை சொல்லித்தரவேண்டும். நீங்கள் இல்லாத உலகத்திலும் அவர்கள் அனைத்தையும் சமாளித்து இப் பெரிய சமூகத்தில் வெற்றி நடை போட மனதளவிலும் உடல் அளவிலும் வலிமையினை ஏற்படுத்தி தருவது பெற்றோர்களாகிய உங்களின் பொறுப்பாகும்.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘யாதும்...

சோழவரம் ஒன்றியம் அலமாதி ஊராட்சியில் வார்டு மறுகரையில் முறைகேடு உள்ளதாக கூறி...

பொது சிவில் சட்ட வழக்கு: டில்லி ஐகோர்ட் விசாரிக்கிறது! பாலின சம உரிமைக்கும்,...

சித்தர்களும், யோகிகளும் பல்வேறு யாகங்கள் செய்து தவ வலிமைகள் பெற்றனர். முற்கால...

அனைவருக்கும் மிக பிடித்தமான பருவம் உடலிலும் மனதிலும் மாற்றங்களை ஏற்படுத்தும்...

12345