Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

யார் பார்த்துக் கொள்வது!

முன்பு கூட்டுக் குடும்ப முறை நம்மிடையே இருந்தது. முதியவர்களை கவனிப்பதற்கும் அவர்களிடம் பேசுவதற்கும் ஆட்கள் இருந்தனர்.

இப்போது கூட்டுக் குடும்பமுறை உடைந்து தனித்தனி குடும்பங்கள் அதிகம் உருவாகிவிட்டன. இதனால் முதியோர்களை யார் பார்த்துக் கொள்வது என்று அவர்களை வீட்டிலேயே தனிமையில் தள்ளும் நிலையோ அல்லது முதியோர் இல்லத்தில் சேர்ப்பதோ நடக்கிறது. இது முதியோரின் மனநலனைப் பெரிதும் பாதிக்கிறது’’ என்கிறார் உளவியல் மருத்துவரான சத்தியநாதன்.

‘‘முதியோருக்கு வயதான காலத்தில் இயல்பான இயக்கம் குறைவதால், வீட்டை விட்டு அதிகம் வெளியில் போக முடிவதில்லை. சக மனிதர்களை சந்திப்பதும் குறைந்துவிடுகிறது. முழுக்க முழுக்க குடும்பத்தில் உள்ளவர்களையே சார்ந்து இருக்க வேண்டியிருக்கிறது.

ஆனால், வீட்டில் இருப்பவர்கள் அதை புரிந்துகொள்ளாமல் புறக்கணிப்பதால் தனிமை உணர்வுக்குத் தள்ளப்பட்டு உறவு சார்ந்த மன அழுத்தம் முதியவர்களுக்கு ஏற்படுகிறது.

உடல்ரீதியாகவும், உளவியல்ரீதியாகவும் இதுபோன்ற சவால்களில் தவிக்கும் முதியவர்களின் நிலையை வீட்டில் உள்ளவர்களும், இளைய தலைமுறையினரும் புரிந்துகொள்ள வேண்டும், குடும்ப நடவடிக்கைகளிலும், திட்டமிடுதலிலும் அவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அவர்களின் உடல் நலத்தையும், மன நலத்தையும் கண்காணித்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின்படி அவர்களுக்கு உணவு கொடுப்பது, உரிய நேரத்துக்கு மருந்துகள் கொடுப்பது போன்றவற்றை கவனமாகப் பின்பற்ற வேண்டும்.

கர்மா, விதி என்பதில் எல்லோருக்கும் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால், நீங்கள் எப்படி உங்கள் பெற்றோரை கவனிக்கிறீர்களோ அது போலத்தான் நாளை உங்கள் குழந்தைகள் கவனிப்பார்கள். காரணம், பெற்றோரின் நடவடிக்கையைப் பார்த்துத்தான் பெரும்பாலும் குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

‘அவர்களுக்கென்ன வாழ்ந்து முடித்து விட்டார்கள்’ என்கிற அலட்சிய எண்ணத்தை முதலில் கைவிட வேண்டும். அன்பான வார்த்தைகளைப் பேசி அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும். வளரும் குழந்தைகளை அவர்களோடு பேச, விளையாட வைக்க வேண்டும்.

இது வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு உதவும். அதேபோல முதியவர்களுக்கு ஏற்றது கூட்டுக் குடும்பம்தான். அதனால் முடிந்த அளவு கூட்டுக் குடும்பத்தில் வாழ முயற்சிக்க வேண்டும்.

தனிக்குடும்பமாக வாழக்கூடிய சூழல் ஏற்பட்டாலும் முதியவர்களையும் அரவணைத்து செல்ல வேண்டும். முதியவர்களோடு வாழ்வதுதான் முழுமையான வாழ்க்கையாகும் என்பதை மறந்துவிடக் கூடாது.’’

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

சென்னை: வர்ற மார்ச் மாசமே ஜெயிலில் இருந்து வெளியே வர போகிறார் சசிகலா என்று...

ஓரின ஈர்ப்புடைய பெண்கள், தங்கள் திருமணத்திற் காக எடுத்த சிறப்பு புகைப்படங்கள்...

செட்டாப் பாக்ஸ் கொள்முதல் தொடர்பான டெண்டர் விவகாரம் தான் மணிகண்டன் - உடுமலை...

டிஸ்கவரி தொலைக்காட்சியில் வெளியாகும் மேன் வெர்சஸ் வைல்டு பிரபலமான நிகழ்ச்சியில்...

அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ஷிபா என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த செப்....

12345