Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

அவர் ஒரு கோமாளி; அமைச்சர் உதயகுமாரை வறுத்தெடுத்த தினகரன்!

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், ''நீதிமன்றத்தில் 18 எம்.எல்.ஏ-க்கள் சம்பந்தப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. தீர்ப்பு வந்தவுடன் என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் எங்கள் உறவினர்கள், பங்காளிகள்தான்.


யாரையும் வற்புறுத்தி அழைக்கவில்லை. பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவாகத்தான் உள்ளனர். சரியான இடம் இதுதான் என்பது அவர்களுக்குத் தெரியும். கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபுவின் மனநிலையிலேயே அனைவரும் உள்ளனர்.


நான் குறிப்பிட்ட ஆறு அமைச்சர்களைத் தவிர, வேறு யார் வந்தாலும் அவர்களை ஏற்றுக்கொள்வோம். அந்த ஆறுபேரும் கட்சிக்குத் துரோகம் செய்தவர்கள். கட்சியில் அவர்களை இணைப்பது பற்றி தொண்டர்களும் பொதுச் செயலாளரும்தான் முடிவு செய்ய வேண்டும்.


இந்த ஆட்சியை மாற்றி புதிய ஆட்சி அமைய வேண்டுமென நினைக்கிறேன். நிறைய சட்டமன்ற உறுப்பினர்கள் முழுமையாக ஆட்சி நீடிக்க வேண்டுமென நினைக்கின்றனர். நீடிக்கும் வரை ஆட்சி நீடிக்கும். எங்களைப் பற்றி பேசும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஒரு கோமாளி. என்னை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸை காரில் ஏற்றி வந்து தங்களுடன் இருப்பதாகக் கூறியவர்.


உதயகுமார் அமைச்சர் என்பதால் உங்களுக்குப் பெரிய நபராகத் தெரியும். பதவி இருக்கும் வரை மட்டும்தான். பதவி போனபிறகு அவரது தொகுதியான திருமங்கலத்துக்குள் போக முடியாது. அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் ஸ்டாலினிடம் ஓ.பி.எஸ் பேசியது பற்றி ஒன்றும் இல்லை. ஆனால், நான் பேசியதைத் தவறாகக் கூறினர். 18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு தீர்ப்புக்குப் பின் தனிக் கட்சித் தொடங்குவது பற்றி முடிவு செய்யப்படும்'' என்றார்.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓரின ஈர்ப்புடைய பெண்கள், தங்கள் திருமணத்திற் காக எடுத்த சிறப்பு புகைப்படங்கள்...

செட்டாப் பாக்ஸ் கொள்முதல் தொடர்பான டெண்டர் விவகாரம் தான் மணிகண்டன் - உடுமலை...

டிஸ்கவரி தொலைக்காட்சியில் வெளியாகும் மேன் வெர்சஸ் வைல்டு பிரபலமான நிகழ்ச்சியில்...

அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ஷிபா என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த செப்....

ஷாப்பிங் செல்லும் போது, பட்ஜெட், சைஸ், கலர் இதில் மட்டுமே பெரும்பாலான பெண்கள்...

12345