Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

வதந்திகளை நம்ப வேண்டாம்... பொதுமக்களே உஷார்...! உஷார்...!!

ஆயுத பூஜை வசூலை அடுத்து தற்போது தீபாவளி வசூல் வேட்டை டுபாக்கூர் செய்தியாளர்களிடையே களைகட்டியுள்ளது. இதன் மூலம் நாட்டின் " நான்காம் தூண் " என போற்றப்படும் பத்திரிகைத் துறை செல்லரித்துப் போகாமல் காப்பாற்ற நீங்களும் ஒரு கை கொடுக்கலாம்.! என்று குமுறுகின்றனர் பாதிப்புக்குள்ளானவர்கள்.

தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசியல்வாதிகளால் மீடியாக்கள் கவனிக்கப்படுவர். இந்த கவனிப்பு என்பது பரிசுப்பொருட்களும் கவரில் பணம் போட்டு தருவது என பல வகைப்படும். அவரவர் வசதிக்கு தந்தது போல இந்த மாதிரியான அன்பளிப்புகளை வழங்குவர்.

இதனை சேட்டிலைட் சேனல் நிருபர்களும் பெறுவதில் விதிவிலக்கல்ல. ஒருசில சேட்டிலைட் சேனல்கள் மற்றும் பத்திரிக்கை நிருபர்கள் மட்டும் அன்பளிப்பு பெறுவதில்லை. கவனிப்பில் இவர்கள் சிக்கிக் கொள்ள மாட்டார்கள். அவ்வளவாக ஆர்வம் செலுத்த மாட்டார்கள். அங்கிருந்து வேகமாக சென்று விடுவார்கள்.

தீபாவளி தற்போது நெருங்கிவிட்டதால் தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் பிரஸ் மீட்டுகள் நடத்தி வருகின்றனர். இவர்கள் தற்போது மீடியாக்களை நன்றாக கவனித்து அனுப்பி வருகின்றனர். இந்த வசூல் மழையில் தாங்களும் நனைவதற்காக சில ஆன்லைன் சேனல்கள் திடீரென தற்போது முளைத்துள்ளன. உடனடியாக லோகோ தயாரிக்கப்பட்டு சாட்டிலைட் சேனலுக்கு இணையாக வைக்கப்பட்டு கவர்கள் வாங்கப்படுகிறது.

தற்போது, திமுக தலைவர் கருணாநிதி மகள் செல்வியின் மருமகனும் கருணாநிதியின் பேரனுமாகிய ஜோதிமணி நூதன முறையில் திருட்டில் ஈடுபட்டதாக நெட்டிசன்கள் அவதூர் பரப்பி வசூல்வேட்டை நடத்தி வருவதாக தி.மு.க நிர்வாகிகள் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

காஸ்மெட்டிக் வியாபாரியிடம், 80 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகவும், மத்திய குற்றப் பிரிவு காவல்துறை விசாரித்துவருவதாகவும் அ.தி.மு.கவை சார்ந்த நெட்டிசன்கள் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஜாகீர் அகமத் தமான் என்பவர், சௌக்கார் பேட்டை காஸ்மெட்டிக் வியாபாரி தினேஷை நேரில் தொடர்பு கொண்டு, தனக்கு தெரிந்தவரிடம் 100 ரூபாய் நோட்டுக்கள் கோடிக் கணக்கில் இருப்பதாகவும், 500 மற்றும் 2000 ரூபாய் மதிப்பிலான நோட்டுகளாக 80 லட்சம் ரூபாய் கொண்டு வந்து கொடுத்தால், 20 சதவீத கமிஷனுடன், 1 கோடி ரூபாயாக கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியதாக நூதன பிரச்சாரம் மேற்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது..

இந்தநிலையில், தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய தி.மு.க. பிரமுகர்களை குறிவைத்து நெட்டிசன்கள் அவதூர் பரப்பி வசூல் வேட்டை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றி சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

தொடரும் தோல்வி பயத்தால், நெட்டிசன்கள் ஆதரவை அ.தி.மு.க. பயன்படுத்தி இடைத்தேர்தல் நேரத்தில் கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் மீது மோசடி வழக்கில் அதுவும் நெருங்கிய உறவினர் கைது செய்யப்பட்டார் என்ற வதந்தி பரப்பி வருவதாக குற்றம்சாட்டுகின்றனர் தி.மு.க. நிர்வாகிகள்.

விதிமுறைக்கு புறம்பாக பத்திரிகையாளர் அரசு அடையாள அட்டை ஏதும் இன்றி திடீரென வசூல் வேட்டையில் கல்லா கட்டும் 'ஆன்லைன் சேனல்" நிருபர்கள் அட்டகாசத்தை அடக்குவது யார்?நாட்டின் நான்காவது தூணான பத்திரிக்கை துறை செல்லரித்துப்போன உண்மையான ஊடகங்களும் பத்திரிக்கையாளர்களும் காரணமாக இருக்கலாமா?

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345