Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

நீதிபதி லோயா மரண வழக்கு: ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்

பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக கருதப்பட்ட சொராபுதீன் ஷேக், போலி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கை விசாரித்த சி.பி.ஐ. தனி கோர்ட்டு நீதிபதி லோயா 2014–ம் ஆண்டு திடீரென இறந்தார். அவருடைய சாவில் மர்மம் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இது குறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.


இந்நிலையில் லோயா மரணம் குறித்த வழக்கு விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதி இருக்கின்றனர். இந்த கடிதத்தில் 100–க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட்டு உள்ளனர்.


இதனை இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரக் ஓ பிரைன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓரின ஈர்ப்புடைய பெண்கள், தங்கள் திருமணத்திற் காக எடுத்த சிறப்பு புகைப்படங்கள்...

செட்டாப் பாக்ஸ் கொள்முதல் தொடர்பான டெண்டர் விவகாரம் தான் மணிகண்டன் - உடுமலை...

டிஸ்கவரி தொலைக்காட்சியில் வெளியாகும் மேன் வெர்சஸ் வைல்டு பிரபலமான நிகழ்ச்சியில்...

அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ஷிபா என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த செப்....

ஷாப்பிங் செல்லும் போது, பட்ஜெட், சைஸ், கலர் இதில் மட்டுமே பெரும்பாலான பெண்கள்...

12345