Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

நூலகங்களில் "முரசொலி" அதிகார துஷ்பிரயோகம்...!! முதல்வருக்கு டி.எஸ்.ஆர். சுபாஷ் துணிச்சல் கடிதம்..!!

செயதி: ஆர்.கே.பூபதி

பத்திரிகை, ஊடகவியலாளர்கள் நலனுக்காக தோழர் டி.எஸ்.ஆர் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

"நூலகங்களுக்கு முரசொலி மற்றும் இரண்டு தி.மு.க ஆதரவு பத்திரிகைகளை வாங்க அரசு செய்தி விளம்பரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது ஒரு வகை அதிகார துஷ்பிரயோகம். இது முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு தெரியாமல் கூட நடந்திருக்கலாம்.

முதல்வரிடம் நல்ல பெயர் வாங்க மக்கள் தொடர்புத் துறை உயர் அதிகாரியே இதனைச் செய்திருக்கலாம்.

எனினும் முதல்வர் ஸ்டாலின் பற்றி உயர்ந்த மதிப்பீட்டை இது சிதைத்து விடும்.

நூலகங்களுக்கு எல்லா பத்திரிகைகளும், இதழ்களும் வரவேண்டும். அது பொது அறிவைப் பெறும் இடம்.

முரசொலி வளர்ச்சி தி.மு.க வை நிலை நிறுத்தாது.

அந்த தொழில் மூலம் தி.மு.க பிழைக்க வேண்டிய அவசியமும் இல்லை.

முரசொலி மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற அதன் செய்தி வெளியீட்டு உத்தியை மாற்றி அமைக்க வேண்டும். அரசைப் பயன்படுத்தக் கூடாது !

தி.மு.க அரசின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் இம்மாதிரி செயல்களை முதல்வர் ஸ்டாலின் கவனித்து தடுத்து நிறுத்திட வேண்டும் என தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் !

இவ்வாறு, டி.எஸ்.ஆர்.சுபாஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345