Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

தமிழக முதல்வருக்கு தனியார் பள்ளி ஆசிரியர்களின் குமுறல் கடிதம்!

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,
தனியார் பள்ளி ஆசிரியர்களின் குமுறல் கடிதம்.

ஐயா, நாங்கள் கடந்த ஒரு வருடமாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றோம்.
'கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்றார் ஔவையார்.

ஆனால் தற்போது கற்றும் எங்களைப் போன்ற தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வேலையோ ஊதியமோ இன்றி தவித்து வருகின்றோம். இதே நிலை நீடித்தால் எங்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடும்.

அது மட்டுமல்ல, எதிர்கால இந்தியாவின் தூண்களாகிய மாணவர்களுக்கு கல்வியின் மேல் உள்ள
பற்று குறைந்து விடும். காரணம் ஆசிரியர்கள் புத்தகத்தை மட்டுமே போதிப்பது இல்லை அதனுடன் வாழ்க்கையையும் தான் சேர்த்து போதிக்கின்றனர்.

தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களாகிய நாங்கள் எந்த விதத்தில் குறைந்து விட்டோம்?

நம் நாட்டின் கல்வி தரத்தை உயர்த்த அயராது பாடுபட வில்லையா?

மாணவர்கள் பாஸ் ஆனால் மட்டுமே போதாது, நல்ல மதிப்பெண்கள் பெற்று மருத்துவர், ஆட்சியர், பொறியாளர், பட்டய கணக்காளர் போன்ற பல உயரிய பதவிகளை அடையவேண்டும் என்று நாங்கள் அவர்களுக்காக உழைக்க வில்லையா?

நாட்டின் கல்வி தரம் உயர தனியார் பள்ளிகள் வேண்டும். ஆனால் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் வாழ்வாதாரம்?

தயவு கூர்ந்து அரசு எங்களைப் பற்றியும் சற்று சிந்திக்க வேண்டும். கற்றறிந்த ஆசிரியர்களின் சாக்பீஸ் பிடித்த கரங்கள், இன்று கட்டிட பணியில் கல் சுமத்தும், காரை கரண்டி பிடித்தும், மளிகை கடையில் பொட்டலம் கட்டியும், துணி வியாபாரம் மற்றும் கிடைக்கும் வேலைகள் செய்தும் தங்களது மனைவி, குழந்தைகளின் பட்டினியைப் போக்கப் போராடுகிறார்கள்.

கணவனை இழந்த பெண் ஆசிரியர்கள் செய்வதறியாது வேதனையில் உள்ளனர். ஏன் அரசு இதை எல்லாம் நினைக்காமல் உள்ளது?

ஏன் எவரும் தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பற்றி நினைப்பது இல்லை? அரசாங்க ஆசிரியர்களுடன் ஒப்பிடும் பொழுது எங்கள் வருமானம் மிகவும் சொற்பம்.

அரசுப்பள்ளிகளுடன் ஒப்பிடும் போது மாணவர்கள் அதிகம். ஏன் நாங்கள் படிக்க வில்லையா?எங்களால் மாணவர்கள் பல துறைகளில் சாதிக்க வில்லையா? ஏன் இந்த வேறுபாடு?

கடந்த ஒரு வருடகாலமாக வேலை இன்றி தவிக்கும் எங்களை சற்று திரும்பி பார்க்க வேண்டும் இந்த அரசு. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது அக்கறை கொள்ளும் அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீதும் அக்கறை கொள்ள வேண்டும். நாங்களும் இந்நாட்டின் குடிமக்கள் தானே?

கடந்த ஓர் ஆண்டு காலமாக அழுது புலம்பிவிட்டோம். ஆனால் பலன் ஏதும் இல்லை. தங்கள் ஆட்சியிலாவது எங்கள் புலம்பலுக்கு விடிவு கிடைக்கும் என நம்புகிறேறோம். எங்கள் வாழ்விலும் உதய சூரியன் உதிக்கும் என்று இக் கடிதத்தை தங்கள் மேலான பார்வைக்கு பணிந்து சமர்ப்பிக்கின்றோம்.


https://www.youtube.com/channel/UCLSzcJCga-ugzVF2ATi_UWA

https://www.youtube.com/watch?v=naayVggPZDM

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345