Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கும் மக்கள்!

சோழவரம் ஒன்றியம் அலமாதி ஊராட்சியில் வார்டு மறுகரையில் முறைகேடு உள்ளதாக கூறி வருகின்ற உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அலமாதி ஊராட்சியில் மொத்த வாக்காளர்கள் 9,400 உள்ளனர்.


இதில் 9 ஊராட்சி வார்டுகள் உள்ளன. இப்பொழுது தேர்தல் ஆணையம் வார்டு மறுவரை செய்து 3வது வார்டில் உள்ள 905 வாக்காளர்களை அப்படியே நான்காவது வார்டாக ஆக மாற்றியுள்ளது.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் வார்டு மறுவரை செய்யும்போது யாருக்கோ சாதகமாக வரையறை செய்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக புகார் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை எனவும் அவர்கள் கூறினர். மேலும் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் தாங்கள் வாக்களிக்கப் போவதில்லை எனவும் மாறாக வீடுகளில் கருப்பு கொடி கட்டி தேர்தலை புறக்கணிப்போம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஆந்திரா தலைநகர் தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை...

வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘யாதும்...

சோழவரம் ஒன்றியம் அலமாதி ஊராட்சியில் வார்டு மறுகரையில் முறைகேடு உள்ளதாக கூறி...

பொது சிவில் சட்ட வழக்கு: டில்லி ஐகோர்ட் விசாரிக்கிறது! பாலின சம உரிமைக்கும்,...

சித்தர்களும், யோகிகளும் பல்வேறு யாகங்கள் செய்து தவ வலிமைகள் பெற்றனர். முற்கால...

12345