Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்குமா காங்கிரஸ்?

கடந்த 2016ம் ஆண்டு முதல் உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? நடக்காதா என பொதுமக்களிடையே குழப்பம் நிலவியது. வேறு வழியின்றி நீதிமன்ற தலையிட்டால் தேர்தல் நடத்தும் என்னம் தற்போதுள்ள அரசுக்கு நெருக்கடி தந்துள்ளது.

மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் நம்பிக்கையை தவிடுபொடியாக்கும் வகையில், குதிரை பேரத்தை ஊக்குவிக்கும் 'மறைமுக தேர்தல்' நடத்த என , அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளதால் ஜனநாயகம் கேள்விக்குறியாகிவிட்டது என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், இச்சட்டம் குறித்து 55வது வட்டம் பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்ப்போம்.

நேர்மையானவர்கள் வரமுடியாது, புதிய சட்டத்தால் பணம் , அரசியல் செல்வாக்கு படைத்தவர்கள் மட்டுமே தலைவர் பதவிக்கு வர முடியும். கவுன்சிலர்களை குதிரை பேரத்தில் விலைக்கு வாங்கும் ஜனநாயக கேலிக்கூத்து நடக்கும்.

நியாயமான, மக்கள் செல்வாக்கு படைத்த, நேர்மையானவர்கள் பதவிக்கு வர இயலாது. பணம், அதிகாரம் உள்ளவர்கள்தான் தலைவராக முடியும். நகராட்சி, பேரூராட்சி தலைவருக்கு மக்கள் நேரடியாக ஓட்டளித்தால் தான் எவ்வித இடையூறு இன்றி அவர்கள் மக்கள் பணி செய்வார் என்பதே இப்பகுதி மக்களின் கருத்து.

நந்தகோபால் செட்டியார், (லேட்) மல்லீஸ்வரி தம்பிதிகளுக்கு மகனாக பிறந்தவர் ந.சசிகுமார். இவரது தாதா சுதந்திர போராட்ட தியாகி ஆவார், இவர், சென்னை சௌகார்பேட்டையில் வசித்து வருகிறார். சிறுவயது முதலே சமூக சேவையில் நாட்டம் கொண்டவர் சசிகுமார்.

இவர், காங்கிரஸ்ஸின் தீவிர விசுவாசி ஆவார், பொதுச்சேவையில் அதிகம் நாட்டம் கொண்டவர் சசிகுமார், அப்பகுதியில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி அசத்தியவர், சமூகப் பணியில் அதிகம் ஈடுபாடு கொண்ட சசிகுமாரை பல கட்சிகள் போட்டி போட்டு வாய்ப்புகள் வழங்க முன்வந்தும் அதை நிறாகரித்தார்.

இவர், காங்கிரசின் தீவிர விசுவாசி என்பதால். தான் வசிக்கும் 55ஆவது பகுதியில் மக்கள் சமூகப் பணியாற்ற கடந்த 23.11.2019 தேதி சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் தேர்தலில் துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 55வது வட்டம் மாமன்ற உறுப்பினராக (கவுன்சிலர்) பதவிக்கு ந. சசிகுமார் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவ.ராஜசேகரனிடம் விருப்ப மனுவை அளித்துள்ளார்.

இவரை உற்சாகப்படுத்தம் வகையில் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள், தொகுதி பொதுமக்கள் உடன் சென்று உற்சாகப்படுத்திய நிகழ்வு அனைவரையும் வியப்பூட்டியது. சசிகுமார் போன்ற இளைஞர்களுக்கு காங்கிரஸ் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதே இப்பகுதி வாசிகளின் கோரிக்கை.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345