Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

ஒரே திருமணச் சட்டம்!?

பொது சிவில் சட்ட வழக்கு: டில்லி ஐகோர்ட் விசாரிக்கிறது!
பாலின சம உரிமைக்கும், பெண்களின் கண்ணி யத்தை பாதுகாப்பதற்கும், பொது சிவில் சட்டம் கொண்டு வர, மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரிக்க டில்லி உயர்நீதி மன்றம் முன்வந்துள்ளது.


பல்வேறு மதத்திற்கு தனியாக உள்ள தனிநபர் சட்டங்களுக்கு மாற்றாக, நாடு முழுவதும் ஒரே மாதிரியான உரிமைகள் கிடைக்கும் வகையில், பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.


இது தொடர்பாக, பா.ஜ. பிரமுகரும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாய் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அது நிலுவையில் உள்ளது.


இந்த வழக்கை எதிர்த்து, முஸ்லீம் தனிநபர் வாரியம் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும் என, அந்த மனுவில் கூறியுள்ளது. இந்நிலையில் அபினவ் பெரி என்ற வழக்கறிஞர், டில்லி உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதை விசார ணைக்கு ஏற்பதாக கூறியுள்ள நீதிமன்றம் இது, மற்ற வழக்குகளுடன் இணைத்து விசாரிக்கப்படும் என கூறியுள்ளது.


மனுவில், அபினவ் பெரி கூறியுள்ளதாவது...
அனைத்து மதங்கள், பிரிவுகளில் உள்ள நடை முறைகள், வளர்ந்த நாடுகளில் உள்ள சிவில் சட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், பொது சிவில் சட்டத்துக் கான வரைவை, மூன்று மாதங்களுக்குள் தயாரிக்கும்படி, சட்ட அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும்.


அதை, இணையதளத்தில வெளியட்டு, பொது மக்கள் கருத்து தெரிவிக்க 60 நாட்கள் அவகாசம் தரவும் உத்தரவிட வேண்டும். பொது சிவில் சட்டத்தை உருவாக்குவதற்காகவே, அரசியல் சாசனத்தின், 44வது பிரிவு கொண்டு வரப்பட்டது. இது, எந்த மதத்தினரின் உரிமையையும் பறிக்கவில்லை.


துருக்கி, எகிப்து போன்ற முஸ்லீம் நாடுகளில் கூட, பொது சிவில் சட்டம் உள்ளது. அதனால், இங்கும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படவேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


ஷரத்து 44
State shall endeavour to provide for its citizens, a uniform civil code (UCC) throughout the territory of india.
இந்திய நாடு என் வீடு, இந்தியன் என்பது என் பேரு, எல்லா மொழியும் என் மொழி, எல்லா மதமும் என்மதமே... எதுவும் எனக்கு சம்மதமே... பரந்து விரிந்த நமது ஜனநாயக இந்திய நாட்டிற்கு ஒரு கொடி, ஒரு பாராளுமன்றம், ஒரு தேசிய கீதம், ஒரு அரசியலைமைப்பு சட்டம் இருப்பதுபோல் ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு தனி சட்டம், ஒவ்வொரு சாதியினருக்கும் ஒரு தனி சட்டம், ஒவ்வொரு சாதி உட்பிரிவுகளுக்கும் ஒரு சட்டம், பெண்களுக்கு தனி சட்டம், ஆண்களுக்கு தனி சட்டம் என்றில்லாமல் பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண் என்ற கடுமையான Detorent Theory of Punishment
சட்டங்கள் கொண்டு வந்தால் மட்டுமே பெருகி வரும் பொருளாதார குற்றங்கள், மத்திய, மாநில அரசுகளை இழிவாக பேசும் குற்றங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கொலை, களவு, கற்பழிப்பு போன்ற குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலுணர்வு, கொலை குற்றங்கள் முதலியவற்றை தடுக்க முடியும்.


அரபு நாடுகளில் கற்பழிப்பு குற்றம் ஒருவன் செய்திருந்து, அது நிரூபிக்கப்பட்டால் அவன் ஆண் குறி வெட்டப்படுகிறது. அதையே பெண்கள் செய்தால் அவர்களுக்கு கசையடி கொடுக்கப்படுகிறது. கடுமையான தண்டனைகள் கொடுப்பதால் மட்டுமே குற்றங்கள் குறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இந்தியா என்ற ஜனநாயக நாட்டில் அவன் எத்தகைய கடுமையான குற்றம் செய்திருந்தாலும், நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்டவராக இருந்தாலும் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை பலம் கொண்ட ஆளுங்கட்சியை சார்ந்தவராக இருக்கும் பட்சத்தில் மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் களில் பெயரால் விடுதலை செய்யப்படுகிறார்கள்.


இஸ்லாம் மதத்தைச் சார்ந்த ஒரு ஆண், நான்கு பெண்களை மணந்துக்கொள்ளலாம். அதற்கு மேலும் அவர்கள் வேறு எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணந்துக்கொள்ளலாம். எந்த தடையும் கிடையாது. அதேபோல கிறிஸ்தவர்களுக்கும் ஒருவர் ஒருவரைத்தான் மணந்துக்கொள்ள வேண்டும் என்று எந்த தடையும் கிடையாது. ஆனால் இந்துவாக இருக்கும் ஒருவன் தன் வாழ்நாளில் ஒரே ஒரு பெண்ணை மட்டும் மணக்க வேண்டும். மீறினால் தண்டிக்கப்படுவார்.


இஸ்லாமியர்கள் எத்தனை குழந்தைகள் வேண்டு மானாலும் பெற்றுக்கொள்ளலாம். நான்கு மனைவிகள் இருந்தால், நான்குபேரும் தலா நான்கு, ஐந்து குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாம். அதேபோல் கிறிஸ்தவர்களும் தன் மனைவி மூலமாக எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், ஒரு இந்துவானவன் குழந்தைகளை ஈன்றெடுக் கும் முறையில் நாம் இருவர், நமக்கு இருவர், நாமே குழந்தை... நமக்கு எதற்கு குழந்தை... என்ற கொள்கையை அரசு இந்துக்கள் மீது திணிக்கிறது.


திருமணம் என்ற கோட்பாட்டில் மத்திய, மாநில அரசுகள் பேதம் காட்டுவது எந்த வகையிலும் நியாயமா காது. எனவே ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையின் அடிப்படையில், நெறிமுறைகளை அரசு வகுக்க வேண்டும். அதன் அடிப்படையில் சட்டம் இயற்றி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே வகையான இந்திய திருமணச் சட்டம் என்ற சட்டத்தை இயற்ற அரசு முன்வர வேண்டும்.


இந்திய அரசியலமைப்பின் 370வது ஷரத்தையும், ஷரத்து 35கி போன்ற சிறப்பு சட்ட ஷரத்துக்களை நீக்கிய பாரத பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் மட்டுமே நாடு முழுவதும் ஒரே சீரான சிவில் சட்டத்தை அமல்படுத்த முடியும்.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345