Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

காட்டுக்குள் மோடி!

டிஸ்கவரி தொலைக்காட்சியில் வெளியாகும் மேன் வெர்சஸ் வைல்டு பிரபலமான நிகழ்ச்சியில் அமெரிக்கா முன்னாள் அதிபர் ஓபாமா முதல் தற்போதைய இந்திய பிரதமர் மோடி வரை பியர்ஸ் கிரில்ஸ் உடன் யாரும் செல்லாத இடங்களுக்குச் சென்று உலகம் முழுவதும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர்ஸ் கிரில்ஸ், அபாயகரமான உயிரினங்களை வேட்டையாடி உயிரோடு உண்ணுவதில் திறமையானவர்.


யாரும் செல்லாத காட்டுக்குள் சென்று பயணம் செய்தும், அருவியில் குதித்து, மலைகளில் ஏறி என பார்ப் பவர்களை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்பவர். அந்நிகழ்ச்சியில் வரும் பியர்ஸ் கிரில்ஸ் உடன் மோடி காட்டுக்குள் பயணம் செய்யும் நிகழ்ச்சி வருகிற ஆகஸ்ட் 12 -ஆம் தேதி, இரவு 9 மணிக்கு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பானது.


பிரதமர் மோடியுடனான அனுபவம் குறித்து பியர்ஸ் கிரில்ஸ் கூறுகையில் “சில ஆண்டுகளுக்கு முன்பு ஒபாமாவை அலாஸ்காவுக்கு அழைத்துச் செல்லும் அறிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதைப் போன்றது தான் தற்போது இந்திய பிரதமருடன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.


ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை என்னவென்றால், இருவருமே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கவே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். வனவிலங்குகள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலே ஒபாமா மற்றும் மோடியுடன் பயணம் செய்துள்ளேன்.


உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கார்பெட் தேசியப் பூங்காவில் காட்டுக்குள் சென்றோம். இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி மிகவும் அமைதியாக இருந்தார். தைரியமாகவும் இருந்தார். அவரை அழைத்துச் சென்றது என்னுடைய பாக்கியம்.


காட்டுக்குள் பயணம் செய்யும் போது பொதுவாக அரசியல்வாதிகள் மிகவும் யோசிப்பார்கள். ஆனால், பிரதமர் மோடி எந்த ஒரு பயமும் இல்லாமல் என்னுடன் பயணம் செய்தார். அவருடைய உடையில் அவர் மிகவும் அழகாக தெரிந்தார். பயணம் சற்று கடினமாகவே இருந்தது. பெரிய கற்கள், கரடு முரடான பாதைகளை கடந்து செல்ல வேண்டியிருந்தது. உலகத் தலைவர் ஒருவருடனான பயணம் மிகவும் எனக்கு பிடித்திருந்தது.


பிரதமர் என்பதை மறந்து அவர் மிகவும் சாதரணமாக பயணித்தார். எப்போதுமே அவரது முகத்தில் புன்னகை இருந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது எனறார்.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஆந்திரா தலைநகர் தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை...

வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘யாதும்...

சோழவரம் ஒன்றியம் அலமாதி ஊராட்சியில் வார்டு மறுகரையில் முறைகேடு உள்ளதாக கூறி...

பொது சிவில் சட்ட வழக்கு: டில்லி ஐகோர்ட் விசாரிக்கிறது! பாலின சம உரிமைக்கும்,...

சித்தர்களும், யோகிகளும் பல்வேறு யாகங்கள் செய்து தவ வலிமைகள் பெற்றனர். முற்கால...

12345