Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் அறிவிப்பு

கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் பிரதமராக பதவியேற்றதில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் வரை 44 நாடுகளுக்கு நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டார்.


இந்நிலையில் அவர் மீண்டும் பிரதமராக பொறுப்பு ஏற்ற பின்னர், அடுத்த 6 மாதங்களில் மேற்கொள்ள உள்ள வெளிநாட்டு பயணம் குறித்த திட்டத்தை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி வருகிற ஜூன் 13 ஆம் தேதி அவர் கிர்கிஸ்தான் நாட்டிற்கு செல்கிறார்.


அங்கு இரு நாட்கள் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். ஜூன் மாதம் 28-ஆம் தேதி ஜப்பான் செல்லும் மோடி, அங்கு இரு நாட்கள் நடைபெறும் ஜி - 20 மாநாட்டில் பங்கேற்கிறார். ஆகஸ்டு மாதம் கடைசி வாரத்தில் பிரான்சுக்கு செல்லும் மோடி, செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் ரஷ்யாவுக்கும், மூன்றாவது வாரத்தில் அமெரிக்காவுக்கும் செல்ல உள்ளார்.


நவம்பர் 4 ஆம் தேதி தாய்லாந்து நாட்டிற்கும்,11ஆம் தேதி பிரேசிலுக்கும் மோடி செல்ல உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓரின ஈர்ப்புடைய பெண்கள், தங்கள் திருமணத்திற் காக எடுத்த சிறப்பு புகைப்படங்கள்...

செட்டாப் பாக்ஸ் கொள்முதல் தொடர்பான டெண்டர் விவகாரம் தான் மணிகண்டன் - உடுமலை...

டிஸ்கவரி தொலைக்காட்சியில் வெளியாகும் மேன் வெர்சஸ் வைல்டு பிரபலமான நிகழ்ச்சியில்...

அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ஷிபா என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த செப்....

ஷாப்பிங் செல்லும் போது, பட்ஜெட், சைஸ், கலர் இதில் மட்டுமே பெரும்பாலான பெண்கள்...

12345