Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

கலக்கத்தில் காங்கிரஸ்

கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து இளம் முஸ்லிம் தலைவர்கள் விலகி மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியில் இணைந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மூன்றாவது இடத்தில் உள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியும் களத்தில் உள்ளது.மூன்று அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து முஸ்லிம் சமூக தலைவர்கள் பலர் அடுத்தடுத்து பதவி விலகி வருகின்றனர். காங்கிரஸில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த செய்யது அர்ஷத்துல்லா சமீபத்தில் விலகி மதச்சார்பற்ற ஜனாதள கட்சியில் இணைந்துள்ளார்.


கட்சிதலைமைமீதுஅவர்அடுக்கடுக்கானபுகார்களைகூறியுள்ளார்.‘‘காங்கிரஸ் சிறுபான்மையினர் பிரிவில் கூட வாரிசு அரசியலே மேலோங்கியுள்ளது. புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பில்லை. தொடர்ந்து பதவியில் இருந்து வரும் ரஹ்மான் கான் போன்ற மூத்த தலைவர்களின் வாரிசுகளுக்கு மட்டுமே கட்சி பதவியும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் வழங்கப்படுகிறது’’ எனக்கூறினார். இதுபோலவே சமீர் அகமது கானும் சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகியுள்ளார். நஸீர் உசேன் உஸ்தாத்தும் காங்கிரஸில் இருந்து விலகி மதச்சார்பற்ற ஜனதாதளத்தில் இணைந்துள்ளார்.


இவர் போட்டியிட உத்தேசித்து இருந்த தொகுதியில் காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் குவாமரூல் இஸ்லாமின் மனைவிக்கு சீட் வழங்க கட்சி மேலிடம் முடிவெடுத்ததால் அதிருப்தியடைந்த அவர் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.மேலும், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் முன்னாள் அமைசர்சர் ஜாபர் ஷெரிப், ரஹ்மான் கான் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் பலரின் உறவினர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளதால், புதியவர்களுக்கு வாய்ப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது.


இதனால் அதிருப்தி அடைந்துள்ள பலர் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் மறுத்துள்ளார். ‘‘காங்கிரஸில் அனைவரும் சமமாகவே நடத்தப்படுகின்றனர். முஸ்லிம் சமூக தலைவர்களுக்கு அதிருப்தி ஏதும் இல்லை’’ என அவர் கூறியுள்ளார்.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓரின ஈர்ப்புடைய பெண்கள், தங்கள் திருமணத்திற் காக எடுத்த சிறப்பு புகைப்படங்கள்...

செட்டாப் பாக்ஸ் கொள்முதல் தொடர்பான டெண்டர் விவகாரம் தான் மணிகண்டன் - உடுமலை...

டிஸ்கவரி தொலைக்காட்சியில் வெளியாகும் மேன் வெர்சஸ் வைல்டு பிரபலமான நிகழ்ச்சியில்...

அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ஷிபா என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த செப்....

ஷாப்பிங் செல்லும் போது, பட்ஜெட், சைஸ், கலர் இதில் மட்டுமே பெரும்பாலான பெண்கள்...

12345