Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

"நிகழ்காலம்" புலனாய்வில் திடுக்கிடும் "கிளுகிளு" தகவல்கள்..!

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் ஸ்வாகா செய்த டுபாக்கூர் தொழிலதிபர் சீனிவாசன் திடீரென தலைமறைவானார். அவர் திருச்சியில் உள்ளாரா? பெங்களூரில் உள்ளாரா? என போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 1

டுபாக்கூர் தொழிலதிபர் சீனிவாசன் சிக்கினால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ருசிகரத் தகவல்கள் நமது புலனாய்வு வேட்டை மூலம் கிடைத்துள்ளது. அதனை இங்கு அச்சுமாறாமல் பதிவு செய்கிறோம்.

இது போல ஆசை வார்த்தைகளை நம்பி இளைஞர்கள் தங்கள் கனவை பலி கொடுக்க வேண்டாம் என்பதுதான் இந்த விழிப்புணர்வு புலனாய்வு கட்டுரையின் நோக்கம்...!

சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் சீனிவாசன் ( வயது 34 )இவரது மனைவி சரண்யா( வயது 32 ) இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

பிரபல தொழிலதிபர் என தன்னைக் கூறிக்கொள்ளும் சீனிவாசன் குடும்ப பின்னணி கொஞ்சம் பலமானது. அரசியல் பின்னணி உடையது

இவரது உறவினர் கிண்டியில் உள்ள ஒரு பிரபல காங்கிரஸ் கட்சிக்காரர். இவரது தாய் அரசு ஊழியர். வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒரு பொறுப்புமிக்க பதவியில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் ஆடம்பரமாகவும் உல்லாசமாகவும் சொகுசாகவும் வாழ ஆசைப்பட்ட டுபாக்கூர் சீனிவாசன் அதற்காக எடுத்துக்கொண்ட முயற்சியும் மோசடி செய்யும் மோசமான சிந்தனையும் வழிமுறையும் தான் அவரை இப்போது தலைமறைவு வாழ்க்கை வாழச் வாழச் செய்துள்ளது. இதற்கு அவரது பேராசை தான் காரணம்.

சென்னை அண்ணாசாலையில் மெயின் ரோட்டில் உள்ள கோத்தாரி சாலையில் பிரின்ஸ் சென்டர் என்ற காம்ப்ளக்ஸில் முதல் மாடியில் ஜோன் டெக் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் பெயரில் ஒரு புதிய கம்பெனியை முறைப்படி பதிவு செய்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சீனிவாசன் துவக்கினார்.

இதையடுத்து சீனிவாசன், தமது அலுவலக நிர்வாகியாக புவனா ( வயது 28 ) ராகுல் வயது 28) என்னும் இரு ஊழியர்களை பணிக்கு அமர்த்தினார்.

இவர்கள் முழுநேர வேலையே, , வெளிநாட்டு பணி மோகத்தில் வரும் இளைஞர்களை ஆசை வார்த்தை கூறி மடக்குவதுதான்.!

ஜோன் டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் ஊழியர்கள் புவனா , ராகுல் ஆகியோர் தங்களது கம்பெனியை பற்றி கேள்விப்பட்டு வரும் இளைஞர்களை மூளைச்சலவை செய்து செய்து தங்கள் பக்கம் முழுமையாக உண்மை இருப்பது போல நம்பவைத்து அவர்களை மதிமயக்கம் செய்துவிடுவார்கள்.

அவர்கள் என்ன சொன்னாலும் நம்பும்படியாக முதலிலேயே அழகான ஆங்கிலத்திலும் திறமையான பேச்சிலும் மயக்கி விடுவார்கள்.

ஐடி கம்பெனியில் பல லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை என்று முதலில் பேசத் தொடங்குவார்கள்.

இதற்கு நீங்கள் அதிகம் பணம் செலுத்த வேண்டாம். முப்பதாயிரம் ரூபாய் முதலில் செலுத்தினால் போதும் .

அதுவும் நாங்கள் இரண்டு மாதம் உங்களுக்கு பயிற்சி அளிப்போம் .

அந்தப் பயிற்சி காலத்தில் மாதம் 7 ஆயிரம் வீதம் 14 ஆயிரம் ரூபாயை நீங்கள் உடனடியாக இரண்டு மாதத்தில் பெற்றுவிடலாம்.

அதற்குப் பிறகு நாங்கள் வழங்கும் பணி அனுபவ சான்று மூலம் நீங்கள் பெரிய கம்பெனிகளில் பல லட்சம் ரூபாயில் பணிக்கு சேர்ந்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம்.

இதற்கான வாய்ப்பை எங்களது பிரைவேட் லிமிடெட் நிறுவனம் உங்களுக்கு ஏற்படுத்தித் தரும்.
இதனை நீங்கள் நிச்சயம் நம்பலாம்.
என்று ஒரு புன்னகையுடன் இவர்கள் சர்க்கரை கலந்த பேச்சை இனிப்பாக துவங்குவார்கள்.

மதுரை ,திருச்சி, கோவை, நெல்லை, சேலம் போன்ற நகரங்களில் இருந்து சீனிவாசன் நிறுவனத்தை நம்பி சென்னைக்கு வந்த இளைஞர்கள் தங்களுக்கு ஐ.டி கம்பெனியில் அதிக சம்பளத்தில் பணி வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் அறை எடுத்து தங்குவார்கள்.

அதன் பிறகு இரண்டு மாதத்தில் அவர்களுக்கு ஒரு தேர்வை சீனிவாசன் நிறுவனம் நடத்தும்.

வேண்டுமென்றே பதில் சொல்ல முடியாத கேள்விகளை கொடுத்து அவர்களுக்கு ஒரு செட்டப் தேர்வு நடத்துவார்கள்.

சீனிவாசன் குரூப் நினைத்தது போலவே இதில் பெரும்பாலான இளைஞர்கள் சரியான பதில் எழுத முடியாமல் தோல்வி அடைந்து விடுவார்கள்

நீங்கள் தேர்வில் பெயில் ஆகி விட்டீர்கள் . அதனால் உங்களுக்கு இப்போது எங்களால் ஒரு உதவி மட்டுமே செய்ய முடியும். ஆறு மாதம் நீங்கள் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்தது போல உங்களுக்கு சர்டிபிகேட் ஒன்று தருகிறோம் .

அதைக் கொண்டு நீங்கள் வேறு நிறுவனங்களில் காண்பித்து அதிக சம்பளத்தில் பணியில் சேர்ந்து விடலாம் என்று கூறி அவர்களை வெளியே அனுப்பி விடுவார்கள். இதனை கொண்டுபோய் பிரபல நிறுவனங்களில் காண்பித்து வேலை கேட்டால் அந்த நிறுவனங்களில் சீனிவாசனின் பிரைவேட் நிறுவனத்திலிருந்து செல்பவர்களுக்கு நோ அட்மிஷன் என்ற போர்டு மட்டுமே பதிலாக கிடைக்கும்..

தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளைஞர்கள் மீண்டும் சீனிவாசன் நிறுவனத்தை அணுகினால் பதிலுக்கு அவர்கள் விரட்டி அடிக்கப் படுவர்.

இது போல பல லட்சங்களை சீனிவாசன் அபேஸ் செய்துள்ளார். மேலும் சிங்கப்பூரில் வேலை என்றால் முப்பதாயிரம் என்றும் மலேசியாவில் வேலை என்றால் 50, ஆயிரம் என்றும் அமெரிக்காவில் வேலை என்றால் ஒரு லட்சம் என்றும் இஷ்டத்துக்கு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டு வெளிநாட்டு கனவை கண்களில் ஏந்தி வரும் இளைஞர்களை முழுமையாக பரிதவிக்க விட்டு ஏமாற்றுவதுதான் சீனிவாசன் நிறுவனத்தின் 24 மணி வேலையாக இருந்துள்ளது.

இவ்வாறு ஒரு சில கோடிகளை பார்த்த சீனிவாசனுக்கு மேலும் பல கோடிகளை பார்க்க ஆசை ஏற்பட்டது.

இந்த எண்ணத்தை நிறைவேற்ற சீனிவாசன் தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் இளைஞர்களை சென்னைக்கு அனுப்பி வைக்க மாவட்ட ஏஜென்டுகளை நியமித்து தொடங்கினார்.

இவ்வாறு மாவட்ட ஏஜென்டுகளாக சேர்ந்தவர்கள் தாங்கள் அறிமுகப்படுத்தும் இளைஞர்களிடம் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். சீனிவாசனுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்தால் போதும். இந்த கண்டிஷன் பிடித்துப்போனதால் மாவட்ட அளவில் ஏஜென்டாக பணியாற்ற பலர் முன்வந்தனர்.

இவ்வாறு மாவட்ட ஏஜென்ட் பணியை திறம்பட செய்த கன்னியாகுமரி அப்துல் மொஹம்மத் 25 லட்சமும் , வேலூர் வாணியம்பாடியை சேர்ந்த சதீஷ் 30 லட்சமும் , மதுரை நகரைச் சேர்ந்த முத்துலட்சுமி ஒண்ணேகால் கோடியும் இருந்து வசூல் செய்து சீனிவாசளிடம் கொடுத்துள்ளனர்.

இதனை அப்படியே சுருட்டி கொண்ட சீனிவாசன் உல்லாசமாக ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து செலவிட்டுள்ளார்.

இது தெரியாமல் மாவட்ட ஏஜென்டுகளாக இருந்தவர்கள் பணத்தை சீனிவாசனிடம் கொடுத்துவிட்டு, ஏமாந்த இளைஞர்களிடம் உரிய பதில் சொல்ல முடியாமல் பரிதவித்து வந்துள்ளனர் .

ஒரு கட்டத்தில் சீனிவாசனின் உண்மை முகம் தெரிய வந்ததும் சென்னைக்கு படையெடுத்து சீனிவாசனை பணம் தருமாறு இவர்கள் அனைவரும் கேட்டுள்ளனர்.

ஆனால் சீனிவாசன், உங்களுக்கு பணம் தரமுடியாது என்னிடம் இப்போது ஏதும் இல்லை. மீறி கேட்டால் தற்கொலை செய்து விடுவேன் என்று கூறி மிரட்டி உள்ளார்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் சீனிவாசனிடம் ஏமாந்த இளைஞர்கள் மற்றும் மாவட்ட ஏஜென்டுகள் அப்துல் மொஹம்மத், சதீஷ், முத்துலட்சுமி தவித்துள்ளனர்.

முத்துலட்சுமிக்கு வயது 38. மதுரையைச் சேர்ந்தவர் .

வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞர்களை தன்னிடம் அனுப்பி தருமாறு சீனிவாசன் கேட்டுக் கொண்டார் அதனை நம்பி முத்துலட்சுமி பணத்தையும் வசூலித்து இளைஞர்களையும் சீனிவாசனிடம் அனுப்பிவைத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சீனிவாசனின் தேனொழுகும் பேச்சில் நம்பி பெரிய அளவில் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்த முத்துலட்சுமி வேறுவழியின்றி தன் சொந்தப் பொறுப்பில் தன் மூலம் சீனிவாசனிடம் ஏமாந்த இளைஞர்களுக்கு சொந்த சொத்தை விற்று திருப்பி தந்துள்ளார்.

அதன் பிறகும் தன்னிடம் இளைஞர்கள் சார்பில் வாங்கிய ஒண்ணே கால் கோடியை திருப்பி தருமாறு சீனிவாசனிடம் முத்துலட்சுமி கேட்டு நச்சரித்து உள்ளார் ஆனால் சீனிவாசன் ரவுடி கும்பலை தனக்கு பக்கபலமாக வைத்துக்கொண்டு முத்துலட்சுமியை விரட்டியடித்துள்ளார்.

மேலும் சம்பந்தப்பட்ட ரவுடி கும்பலிடம் சிக்கிய சீனிவாசன் ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் 8 லட்சம் மதிப்புள்ள கார் ஆகியவற்றை ரவுடி கும்பலிடம் பறிகொடுத்துள்ளார்.

தொடர்ந்து ரவுடிக் கும்பலின் மிரட்டலால் வேறுவழியில்லாமல் முத்துலட்சுமி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலபேர் உதவியை நாடி சீனிவாசனால் தான் ஏமாற்றப்பட்டது குறித்து கூறியுள்ளார்.

இதையடுத்து வழக்கறிஞர்கள் தலையிட்டு பேசியும் எவ்வித பயனும் இல்லை. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்ந்து முத்துலட்சுமி சென்னை மாநகர ஆணையரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் நிலைமை மோசமாவதையும் சீனிவாசன் ஏமாற்றுப் பேர்வழி என்பதையும் அவருக்கு ஆதரவு அளித்தால் தான் செல்வாக்கு சரிந்து விடும் என்பதையும் உணர்ந்து கொண்ட சீனிவாசனின் உறவினரான கிண்டியில் உள்ள காங்கிரஸ் பிரமுகர் தானும் ஒரு புகார் மனுவை சென்னை மாநகர ஆணையரிடம் அளித்து அதில் சீனிவாசனுக்கும் தனக்கும் ரத்த உறவு உட் பட எவ்வித உறவும் இல்லை என்றும் குறிப்பிட்டு மேற்கண்ட பிரச்சினையிலிருந்து தழுவியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

இதனால் குடும்ப அரசியல் பின்னணி பலத்தை இழந்த சீனிவாசன் வேறுவழியின்றி 2018 அக்டோபர் முதல் தேதி வாக்கில் சென்னையிலிருந்து தலைமறைவானார் இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் சீனிவாசன் உறவினரான காங்கிரஸ் கட்சி பிரமுகரிடம் கேட்டபோது, சீனிவாசன் திருச்சியில் உள்ளார் என்று காங்கிரஸ் பிரமுகர் கூறியுள்ளார்.

ஆனால் குற்றப்பிரிவு காவல்துறை மூலம் சீனிவாசனின் தொலைபேசி எண்ணை ட்ரேஸ் செய்தபோது அவர் பெங்களூரில் இருப்பது போல சிக்னல் வந்துள்ளது.
அதனால் டுபாக்கூர் சீனிவாசன் திருச்சி அல்லது பெங்களூரில் எங்கு தலைமறைவாக உள்ளார் என குழப்பம் எழுந்துள்ளது. இதற்கு போலீஸார் தான் தீர்வு சொல்ல வேண்டும்.

அதே சமயத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி இளைஞர்களை மூளைச்சலவை செய்து சுமார் 4000 இளைஞர்களுக்கு மேல் 5 கோடி அளவுக்கு மெகா மோசடியில் டுபாக்கூர் தொழிலதிபர் சீனிவாசன் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை காவல்துறை மத்தியிலும் அவரை நம்பிய இளைஞர்களிடையேயும் ஏற்படுத்தியுள்ளது

இதில் அதிக அளவில் ஏமாற்றத்துக்குள்ளான மதுரை முத்து லட்சுமி கூறுகையில், சீனிவாசனை நம்பியும் சென்னையில் பல கோடி மதிப்பில் தனக்கு சொத்துக்கள் இருப்பதாக சீனிவாசன் கூறியதை நம்பியும் நான் தற்போது ஒரு கோடி யே 25 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்டவர்களுக்கு என் சொந்த சார்பில் கொடுத்து பணத்தை இழந்துள்ளேன்.

காவல் துறைதான் உரிய நடவடிக்கை எடுத்து சீனிவாசனிடம் இருந்து நாங்கள் ஏமாந்த பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று கண்ணீர் மல்க கதறியபடி கூறினார்.

முத்துலட்சுமி போலவே இளைஞர்கள் பலரும் தங்களது வீட்டு கறவை மாடுகளை அடிமாட்டு விலைக்கு விற்று அந்த பணத்தில் வெளிநாடு வேலை கிடைக்கும் என்று சீனிவாசனிடம் கொடுத்து ஏமாந்துள்ளனர்.

வெளிநாட்டு வேலை என்னும் கனவை தன் கண்களில் ஏந்தி வந்த தமிழகத்தின் பல்வேறு கிராமத்து இளைஞர்களை நம்ப வைத்து மோசடி மன்னன் டுபாக்கூர் தொழிலதிபர் சீனிவாசன் படுகுழியில் தள்ளி உள்ளார்.

இனியும் இதுபோன்ற மோசடி பேர்வழிகளை வெளிநாட்டு மோகத்தில் நம்பி இளைஞர்கள் ஏமாந்துவிடக்கூடாது.

டுபாக்கூர் தொழிலதிபர் சீனிவாசன் பலவகையிலும் தந்திரமாக மோசடியை அரங்கேற்றியுள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக சினிமா நட்சத்திரங்கள், பிரபல தொழில் அதிபர்கள், ஊடக, பத்திரிக்கை ஆசிரியர்கள் ஆகியோர் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அதனை பொதுவெளியில் பகிர்ந்து தன்னை ஒரு நேர்மையானவர் போலவும், பிரபலமானவர் போலவும், வசதி உள்ளவர் போலவும் சீனிவாசன் காட்டி கொண்டுள்ளார். இனியும் இதனை நம்பி யாரும் ஏமாறக்கூடாது.

டுபாக்கூர் தொழிலதிபர் சீனிவாசன் போன்றவர்களை தோலுரிக்கும் பணியில் நிகழ் காலம் புலனாய்வு பத்திரிகை தொடர்ந்து செய்திகள் மூலம் போராடும். சமரசம் ஏதுமில்லை. இதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் வேண்டாம். இந்த செய்தியே அதற்கு சாட்சி..!

அதே சமயத்தில் பாதிக்கப்பட்ட பல லட்சம் ரூபாய்களை இழந்த ஏழை அப்பாவி இளைஞர்கள் இனியும் தாமதிக்காமல்.. மனுக்கள் மீது நேர்மையாக நடவடிக்கை எடுத்துவரும் தமிழக டிஜிபி ராஜேந்திரன், மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் விஸ்வநாதன் ஆகியோரை நேரில் சந்தித்து மனுக்களை கொடுத்து முறையிட்டால் உரிய தீர்வு உடனே கிடைக்கும்.

நிகழ்காலம் புலனாய்வு பத்திரிகை எப்போதும் பாதிக்கப்பட்டவர்களின் பக்கமே துணை நிற்கும் . அநியாயத்திற்கு எப்போதும் துணை போகாது. டுபாக்கூர் தொழிலதிபர் சீனிவாசன் ஒருமுறை தன்னை காப்பாற்றுமாறு நம்மை அணுகிய போதும் இதையே அவரிடம் பதிலாக கூறினோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கி தனது பாவக் கறையைத் துடைத்துக் கொள்ளுமாறும் நீதிமன்றம், வழக்கறிஞர்கள் துணையை நாடி போதிய அவகாசம் பெற்று சிக்கலில் இருந்து விடுபடு மாறும் சீனிவாசனுக்கு அறிவுரை வழங்கினோம் என்பதை இங்கு நேர்மை திறத்துடனும் நெஞ்சுரத்துடனும் பதிவு செய்கிறோம்.

நிகழ்காலம் புலனாய்வு பத்திரிகை அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் . நீதியை நிலைநாட்டும்.!

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345