Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

விரிசலை சரி செய்ய பா.ஜ.க முயற்சி!

பா.ஜ.க - தெலுங்கு தேசம் இடையே ஏற்பட்டுள்ள விரிசலை சரிசெய்வதற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பா.ஜ.க தேசியப் பொதுச் செயலர் ராம் மாதவ் சூசகமாக தெரிவித்தார்.


மத்தியில் ஆளும் பா.ஜ.க கூட்டணியில் தெலுங்கு தேசம் அங்கம் வகிக்கிறது. எனினும், இரு கட்சிகளுக்கும் இடையே அண்மைக் காலமாக உரசல் ஏற்பட்டுள்ளது. மேலும் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பொது பட்ஜெட்டில், ஆந்திர அரசு கோரியிருந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால், முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், கட்சியின் பிற தலைவர்களுக்கும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.


இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் பேச்சவார்த்தை நடத்தப்படும் என்று ராம் மாதவ் சூசகமாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் மேலும் கூறியதாவது:


தெலுங்கு தேசம் கட்சி, பா.ஜ.கவின் பழமையான, மதிப்பு வாய்ந்த கூட்டணியாகும். தெலுங்கு தேசம் கட்சியினரிடையே பா.ஜ.க மீது அதிருப்தி நிலவுவதாகத் தெரிகிறது.


எனவே, முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து, ஆந்திர மாநிலத்தின் நலனில் பா.ஜ.க அக்கறையுடன் உள்ளது என்பதை அவரிடம் விளக்குவோம். ஆந்திரத்துக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் மட்டுமின்றி, இதர திட்டங்களை நிறைவேற்றுவதிலும் ஒத்துழைப்பு அளிப்போம் என்றார் அவர்.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ஷிபா என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த செப்....

ஷாப்பிங் செல்லும் போது, பட்ஜெட், சைஸ், கலர் இதில் மட்டுமே பெரும்பாலான பெண்கள்...

வங்கிகளில் உரிமை கோரப்படாமல், கேட்பாரற்றுக் கிடக்கும் டெபாசிட் பணத்தின் அளவு...

நம் முன்னோர்கள் கூறியுள்ள காரணங்களை அப்படியே நாம் பின்பற்றினாலே, நமது வாழ்க்கையும்,...

சென்ற 9.7.2019 அன்று அதிகாலை 5.40 மணிக்கு அத்திவரதரை தரிசித்து விட்டு வெளியே வந்தபிறகு...

12345