Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

களவாணி-2 அதிகாரபூர்வ அறிவிப்பு!

விமல், ஓவியா நடிப்பில் வெளியாகி வெற்றிப் படமாக அமைந்த ’களவாணி’ படத்தின் இரண்டம் பாகத்தை சற்குணம் இயக்கவிருக்கிறார் என்றும் இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த விமல், ஓவியாவே கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவல் ஒரு சில நாட்களுக்கு முன் வெளியாகியிருந்தது. இந்நிலையில் ‘களவாணி’ முதல் பாகத்தை தயாரித்த ‘ஷெராலி ஃபிலிம்ஸ்’ தயாரிப்பாளர் நசீர் சார்பில் ஒரு பத்திரிகை செய்தி வெளியாகியுள்ளது.

அதில் ‘ஷெராலி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் ‘களவாணி-2’ படத்தை மிகுந்த பொருட் செலவில் தயாரிக்க இருக்கிறது என்றும் இதில் நடிக்கவுள்ள நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்களை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது. அத்துடன் ‘களவாணி-2’ படத்திற்கான படத் தலைப்பின் உரிமையை ஷெராலி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையே பெற்றுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. இதனால் ‘களவாணி-2’ உருவாக்கத்தில் பிரச்சனை எழுந்துள்ளது!

’களவாணி’ படத்தை தொடர்ந்து ஷெராலி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த படம் எத்தன். சுரேஷ் இயக்கிய இந்த படத்திலும் விமல் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து இந்த நிறுவனம் தயாரித்து வரும் படம் ‘வதம்’. இந்த படத்தில் பூனம் கௌர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மதிவாணன் இயக்கி வருகிறார். இந்த படம் மே மாதம் வெளியாகும் என்றும் ‘ஷெராலி ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.


You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345