Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

புதிய படங்கள் வெளியிடுவது நிறுத்தம்!

தியேட்டர்களில் திரைப்படங்களை வெளியிடும் ‘QUBE’ உட்பட்ட பல டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கான கட்டணங்கள் மிக அதிகமாக இருக்கிறது என்றும் இந்த கட்டணங்களை குறக்க வேண்டும் என்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நடத்தி வந்த பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைந்ததால் ஏற்கெனவே அறிவித்திருந்தபடி புதிய திரைப்படங்கள் வெளியீட்டு நிறுத்தும் (மார்ச்-1) முதல் துவங்கியது.

இந்த பட வெளியீட்டு நிறுத்தத்திற்கான காரணம் குறித்து ‘தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்’ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இடம் பெற்றுள்ள விவரம் வருமாறு: புதிய திரைப்படங்கள் நிறுத்தம் சம்பந்தமாக அரசிற்கு கடிதம் அளித்தல். இந்த பிரச்சனையில் அரசு தலையிட்டு முடித்து கொடுக்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம்.

டிஜிட்டல் சர்வீஸ் ப்ரோவைடேர்ஸ் உடன் இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் நியாயமான வகையில் எந்த வித உடன்படிக்கையும் ஏற்படாததால் இனி அவர்களோடு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது. இது சம்பதமாக இனி திரையரங்க உரிமையாளர்களுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.
இதுவரை தயாரிபளர்கள் செலுத்தி வந்த VPF கட்டணத்தினை இனி செலுத்துவது இல்லை என்று முடிவெடுக்கப்பட்டது. இனி handling Charges மட்டுமே செலுத்துவது முடிவெடுக்கப்பட்டது.

VPF – Virtual Print Fee or Digital Print Fee என்பதாகும். இது வேறு ஒன்றுமில்லை. திரையரங்க உரிமையாளர்கள் அவர்களுக்கு சொந்தமாக Projector வாங்கி வைக்காமல் Digital Cinema Service Provider என்று அழைக்க கூடிய QUBE, UFO, SCRABBLE, PXD, SONY, PRO-V, AREOS போன்ற நிறுவனங்களிடம் வாடகைக்கு எடுத்து அவர்களது திரையரங்கில் நிறுவியுள்ளார்கள். அந்த வாடகையை அவர்கள் கட்டாமல் தயாரிப்பாளரை கட்ட வைக்கிறார்கள்.

அந்த கட்டணம் தான் VPF ஆகும். திரையரங்குகளில் திரையரங்கு உரிமையாளர்களே Projector and Server சொந்தமாக வைத்துகொள்ள வேண்டும். அந்த திரையரங்குகளுக்கு மட்டுமே திரைப்படங்களை வெளியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது. தயாரிப்பாளர்களின் இந்த நியாயமான கோரிககைகளுக்கு ஆதரவு வேண்டுமாய் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம், தெனிந்திய திரைப்பட வர்த்தக சபை, கில்ட், தமிழ்நாடு இயக்குனர் சங்கம், தெனிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சமேளனம் ஆகிய அமைப்புகள் கேட்டு கொள்கிறோம்.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ஷிபா என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த செப்....

ஷாப்பிங் செல்லும் போது, பட்ஜெட், சைஸ், கலர் இதில் மட்டுமே பெரும்பாலான பெண்கள்...

வங்கிகளில் உரிமை கோரப்படாமல், கேட்பாரற்றுக் கிடக்கும் டெபாசிட் பணத்தின் அளவு...

நம் முன்னோர்கள் கூறியுள்ள காரணங்களை அப்படியே நாம் பின்பற்றினாலே, நமது வாழ்க்கையும்,...

சென்ற 9.7.2019 அன்று அதிகாலை 5.40 மணிக்கு அத்திவரதரை தரிசித்து விட்டு வெளியே வந்தபிறகு...

12345