Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

’சூர்யா-36’ சென்னையில் பிரம்மாண்ட செட்!

சூர்யாவின் 36-வது படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழுவினர் தயராகி வருகின்றனர்!

இப்போது இந்த படத்திற்காக அம்பாசமுத்திரம் நகரத்தை போன்ற மிகப் பிரம்மாண்டமான செட் ஒன்றை 3 கோடி ரூபாய் செலவில் சென்னையில் இரவு பகலாக உருவாக்கி வருகிறார்கள். இந்த செட் அமைக்கும் பணி கலை இயக்குனர் ஆர்.கே.விஜயன் தலைமையில் 220-கும் மேற்பட்ட தொழிலாளர்கள் செய்து வருகிறார்கள். இந்த செட்டில் 20 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.

‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் படத்தொகுப்பை ஜி.கே.பிரசன்னா கவனிக்க சண்டை பயிற்சியை சாம் கவனிக்கிறார். சூர்யாவும், செல்வராகவனும் முதன் முதலாக இணைந்துள்ள இந்த படம் மீது இப்போதே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345