Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

‘கைதி’ ரிலீஸ் தகவல்!

கார்த்தி நடிக்கும் படம் ‘கைதி’. ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு மற்றும் ‘விவேகானந்தா பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் திருப்பூர் விவேக் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து இப்போது படத்தின் இறுதிகட்ட வேலைகள் படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் ‘கைதி’ படத்தை அக்டோபர் மாதம் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்திற்கு சாம்.சி.எஸ். இசை அமைத்து வருகிறார்.

ஒளிப்பதிவை சத்யன் சூரியன் கவனித்துள்ளார். ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்து வருகிறார். சண்டை காட்சிகளை அன்பறிவு அமைத்திருக்க, கலை இயக்கத்தை என்.சதீஷ் குமார் கவனித்துள்ளார்.

இந்த படத்தை தொடார்ந்து கார்த்தி ஜித்து ஜோசஃப் இயக்கத்தில் ஜோதிகாவுடன் ஒரு படத்திலும், ‘ரெமோ’ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345