Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது!

முன்னணி பாலிவுட் நடிகைகளை பின்னுக்கு தள்ளிய தமிழ் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு “மகாநடி” படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சினிமா துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், சிறந்த திரைப்படங்கள் என்று பல்வேறு பிரிவுகளுக்கு மத்திய அரசின் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டு மே மாதம் விருதுகள் வழங்கப்படும். ஆனால், அப்போது மக்களவை தேர்தல் நடந்ததால், இந்த ஆண்டிற்கான தேசிய விருதுகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராட்டி, பெங்காலி என்று பல்வேறு மொழிகளில் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் என்று தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. தேசிய தேர்வுக்குழு விருதுக்கான படைப்புகளை தேர்வு செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், இந்த ஆண்டிற்கான 66ஆவது தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில், “மகாநடி” படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் படம் சிறந்த தெலுங்கு படமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பிரியா கிருஷ்ணசாமியின் “பாரம்” படம் சிறந்த தமிழ் திரைப்படமாக தேர்வாகியுள்ளது.

தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் ஆகியோரது நடிப்பில் வந்த “பத்மாவத்” படத்தின் சஞ்சய் லீலா பன்சாலிக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிந்தியில் வெளியான “பதாய் ஹோ” படம் சிறந்த முழுநேர பொழுதுபோக்கு படமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் நடித்த சுரேஹா சிக்ரிக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று மராட்டிய மொழியில் வெளியான “சும்பக்” படத்தில் நடித்த சுவானந்த் கிர்கிரேவுக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

சென்னை: வர்ற மார்ச் மாசமே ஜெயிலில் இருந்து வெளியே வர போகிறார் சசிகலா என்று...

ஓரின ஈர்ப்புடைய பெண்கள், தங்கள் திருமணத்திற் காக எடுத்த சிறப்பு புகைப்படங்கள்...

செட்டாப் பாக்ஸ் கொள்முதல் தொடர்பான டெண்டர் விவகாரம் தான் மணிகண்டன் - உடுமலை...

டிஸ்கவரி தொலைக்காட்சியில் வெளியாகும் மேன் வெர்சஸ் வைல்டு பிரபலமான நிகழ்ச்சியில்...

அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ஷிபா என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த செப்....

12345