Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

ஹாலிவுட் படத்தில் நெப்போலியன்!

கிரிஸ்டல் கிரீக் மீடியா மற்றும் கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டானியல் நட்சன் இயக்கத்தில், கோர்ட்னி மாத்யூஸ், ஆரன் நோபிள், நெப்போலியன், ஷீனா மோனின், ராபர்ட் லெனன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’.

முழுநேர வேலை பறிபோன நிலையில், முன்னாள் ஸ்கேட்டிங் சாம்பியனான கோர்ட்னி, தன்னுடைய நண்பரின் உறைந்த குளத்தில், ஸ்கேட்டிங் பயிற்சியா ளராக தனது பணியைத் துவங்குகிறார். கூடுதல் மாணவர்களை ஈர்க்கும் விதத்தில், ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ ஒன்றை வடிவமைத்து, தனது மருமகளுடன் விநியோகித்து வருகிறார்.

இந்நிலையில் அவரது பள்ளிப்பருவ காதலன் ஆரன் நோபிள் தனது மருமகளை ஸ்கேட்டிங் பயிற்சியில் சேர்ப்பதற்காக கோர்ட்னியை சந்திக்கிறார். காரணம் சொல்லாமல் பிரிந்து சென்ற பள்ளிப்பருவ காதலன் ஆரன், பிரிவின் பாதிப்புகளில் இருந்து போராடி மீண்டு, வாழ்க்கையை சீரமைத்துக் கொண்டிருக்கும் கோர்ட்னி, பல ஆண்டுகளுக்கு பின் நடந்த இந்த சந்திப்பின் தாக்கம் என்ன, அவர்கள் வாழ்வில் நடந்ததென்ன, காதலர்கள் இணைந்தார்களா என்பதே இப்படத்தின் கதைக்களம்.

இப்படத்தில் ஏஜண்ட் குமார் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நெப்போலியன் நடித்திருக்கிறார்.

இத்திரைப்படத்தில் மிச்சிகன் மாகாணத்தின் எழில் கொஞ்சும் ஏரிகள், பச்சைப் புல்வெளிகள், டெட்ராய்ட் நகரின் நவீன தொழில்துறை மையங்கள், தனித்துவமான நான்கு பருவநிலைகள் என மிகவும் பிரமிப்புடன் ரசிக்க தக்க வகையில் படமாக்கியிருக்கிறார்கள்.

இப்படம், விரைவில் ஆசிய நாடுகள் மற்றும் இந்தியாவில் வெளியாக இருக்கிறது.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ஷிபா என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த செப்....

ஷாப்பிங் செல்லும் போது, பட்ஜெட், சைஸ், கலர் இதில் மட்டுமே பெரும்பாலான பெண்கள்...

வங்கிகளில் உரிமை கோரப்படாமல், கேட்பாரற்றுக் கிடக்கும் டெபாசிட் பணத்தின் அளவு...

நம் முன்னோர்கள் கூறியுள்ள காரணங்களை அப்படியே நாம் பின்பற்றினாலே, நமது வாழ்க்கையும்,...

சென்ற 9.7.2019 அன்று அதிகாலை 5.40 மணிக்கு அத்திவரதரை தரிசித்து விட்டு வெளியே வந்தபிறகு...

12345