Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

கனவுகளே ஆயிரம் கனவுகளே

நமக்கு ஏற்படும் ஆபத்துக்களை நமது மனம் முன்னமே உணர்ந்து நம்மை எச்சரிக்கலாம். அது போல நன்மைகளையும் கூட பறை சாற்றலாம். அதன் சமிக்யை தான் கனவுகள். நாம் தூங்கும் சமயத்தில் சில சமயங்களில் பலருக்கு எண்ணற்ற கனவுகள் வந்து செல்லலாம். அவற்றில் சில கனவுகள் அடிக்கடி ஞாபகமும் வரலாம். ஆனால், அதன் பலன் தெரியாமல் தவிக்கலாம். அவர்களுக்காகவே இந்தக் கனவுகளும் அதன் பலன்களும் என்றப் பகுதியை அளிக்கிறோம். இந்தப் பதிப்பில் பெரும்பாலான கனவுகளும் அவற்றிற்கான பலன்களும் இடம் பெற்று இருக்கிறது. எனவே அவை சம்மந்தமான கனவுகள் வந்தால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை கூறப்பட்டுள்ளது. இத்தகவல் அனைவருக்கும் பயன்படும் என்று நம்புகிறோம்


கனவுகள் உண்மையா, கற்பனையா என்ற விவாதமே இன்றைய காலக்கட்டத்தில் நடந்து வருகிறது. இந்தக் கனவுகள் குறித்து நமது புராணங்களும், இதிகாசங்களும் என்ன சொல்கிறது என்று பார்ப்போம் வாருங்கள்.


திருமால்:- திருமாலை அல்லது ஸ்ரீ மந் நாராயணரை எந்த வடிவில் கண்டாலும் செல்வச் செழிப்பு ஏற்படும். மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். எதிரிகள் கூட வீழ்வார்கள். கருடன் மீது திருமால் வருவது போலக் கனவு கண்டால் வழக்குகள் சாதகம் ஆகும்.


ஏசுநாதர் அல்லது மகான்கள்:- ஏசுநாதர் அல்லது மகான்களைக் கனவில் கண்டால் மனதில் அமைதி உண்டாகும். புகழ் உண்டாகும். ஆனால், அதே சமயத்தில் ஏசுநாதரை சிலுவையில் அறைவது போலக் கனவு கண்டால் பெரும் துன்பம் வந்து சேரும். எனினும், இறுதியில் அது வெற்றி ஆகும்.


கடவுளை சிலைகளாகக் கண்டால்:- ஏதாவது ஒரு குறிப்பிட்ட கடவுள், விக்கிரக வடிவில் அடிக்கடி கனவில் வந்தால் உடனே அந்தக் கடவுள் இருக்கும் ஸ்தலம் நோக்கிப் புறப்பட்டு தரிசனம் செய்து வருவது நல்லது. ஒரு கடவுளின் சிலை ஆனது மண்ணில் புதைக்கப்படுவது போலக் கனவு கண்டால், உங்களது தெய்வ பக்தி குறைந்து விட்டது என்று அர்த்தம். மற்றபடி பெரிய கெடுதல் வராது.


கோபுரம் :-ஏதேனும் ஸ்தலத்தின் கோபுரத்தை நீங்கள் கனவில் கண்டால் காரியங்கள் சித்தியாகும், அதைவிட உங்கள் பாவங்கள் தொலைந்தது என்று தான் அர்த்தம்.


பாழ் அடைந்த கோயில் மண்டபம்:-பாழ் அடைந்த கோயில் மண்டபத்தை கனவில் கண்டால் பயணங்களால் தீமை வந்து சேரும் என்று அர்த்தம் கொள்ள வேண்டும்.


கோயில் மணி:-கோயில் மணியை கனவில் கண்டால் நீங்கள் நினைக்கும் காரியம் சித்தியாகும் என்று பொருள்.அது போல கோயில் மணி அடிப்பது அல்லது அடிக்கப்படுவது போலக் கனவைக் கண்டால் பொருள் வரவு உண்டு.கோயில் மணி அறுந்து விழுவது போலக் கனவு கண்டால் பொருள் நஷ்டம், இடையூறுகள் கூட ஏற்படும்.கோயில் மணியை நீங்கள் அடிக்கச் செல்லும் சமயத்தில் அதன் மேல் பாம்பு இருக்கக் கண்டால் அது சர்ப்ப தோஷம் ஆகும். உங்களுக்கு வர வேண்டிய நன்மைகளை எல்லாம் அந்தத் தோஷம் தடுத்துக் கொண்டு உள்ளதாகப் பொருள். காலஹஸ்த்தி சென்று பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்..


ஐயனார்:-ஊர் காவல் தெய்வமான ஐயனாரைக் கனவில் கண்டால் சகல பாக்கியங்களும் ஏற்படும்.
கனவுகள் தொடரும்

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345