Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

பொது பிரச்சனைகளுக்கு களத்தில் இறங்கி தீர்வு காணும் தன்னார்வலர், வழக்கறிஞர் கோட்டீஸ்வரன்!

நாம் வசிக்கும் தெருவில் தெருவிளக்கு எரிய வில்லை, தண்ணீர் தேக்கம், சாலையில் பள்ளம் என எந்த பிரச்சனையாக இருந்தாலும், உடனே அரசு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணும் குணம் கொண்ட தன்னார்வலர், வழக்கறிஞர் கோட்டீஸ்வரன் என்றால் மிகையல்ல...

இவரின் தீவிர ஈடுபாட்டால் அதிருப்தி அடைந்த விரோதிகள் கோட்டீஸ்வரன் பெயரை சீர்குலைக்க, நூதன முறையில் அவதூறு செய்திகளை பரப்பி, ஊடகங்கள் வாயில் வெளியிட்டும் உள்ளுர் கோஷ்டிகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

இதனை நம்பி, நாமும் கோடிகளில் வலம் வரும் கேடி என்று தவறான செய்தியை வெளியிட்டதில் வருந்துகிறோம். நாம் அவரை தொடர்புகொண்டபோது, அவரது தொடர்பு எண் தொடர்புக்கு அப்பால் இருந்ததே இதற்குக் காரணம். நாம் செய்த தவறுக்கு ஆயிரம் காரணங்கள் கூறினாலும், அவரது சேவையின் முன் ஈடாகாது. அன்று முதல் இன்று வரை அவர் தொடர்ந்து தனது சேவையிலும், ஈடுபாட்டிலும் விடாப்பிடியாக உழைத்து வருகிறார்.

ஒவ்வொரு மனிதனும் சமூக சேவையிலும், வழக்கறிஞர் பணியிலும் பல சவால்களை சந்திக்க நேரிடும். பல விமர்சனங்கள் வந்து சேரும். சோர்வின்றி, களைப்பின்றி, தான் செய்யும் செயலின் ஈடுபாட்டினால் அதை மாற்றிட முடியும் என்பதற்கு உதாரணம் வழக்கறிஞரும், தன்னார்வலருமான கோட்டீஸ்வரன் என்றால் மிகையாகாது.

தெரு ஆக்கிரமிப்பு, சாக்கடை அடைப்பு, தண்ணீர் பிரச்சனை, சாலை அமைப்பு என, தான் தினமும் சந்திக்கும் சிக்கல்களுக்கு அன்றைக்கே புகார் அளிப்பதோடு நிறுத்திவிடாமல். அந்த பிரச்சனை தீரும் வரை அந்த புகாரை பின்பற்றுகிறார் கோட்டீஸ்வரன்.

இதனால் அதிருப்தியடைந்த உள்ளுர் கயவர்கள் கூட்டம் இவரின் சேவையைக் கண்டு அதிருப்தியடைந்தாலும், கோட்டீஸ்வரன் தான் செய்யும் சேவையை கடமையாக பார்க்கிறாரே தவிர சிரமமாக பார்க்கவில்லை.

கோட்டீஸ்வரன் பணி மென்மேலும் சிறக்க நிகழ்காலம் செய்திகுழுவின் மனமார்ந்த வாழ்த்துகள். எங்களது தவறான செய்திக்கு மீண்டும் வருந்துகிறோம் கோட்டீ. நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் இனி நிகழ்காலம் துணை நிற்கும்.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345