Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

தனியார் அமைப்பு... மத்திய அரசு சின்னத்தை பயண்படுத்தலாமா? திட்டக்கமிஷன் திட்டவட்டம்!

நிகழ்காலம் தொடர்ந்து பீபள் பாரம் ஆஃப் இந்தியா குறித்து பல கட்டுரைகள், செய்திகளை வெளியீட்டு வருகிறது. வாசகர்கள் பலர் நம்மிடம் பி.எஸ்.எஸ். அமைப்பு குறித்த உண்மை தகவலை வெளியிடுமாறு கேட்டதையொட்டி, நாம் நமது நண்பர் மூலம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 19.07.2013 அன்று பெறப்பட்ட ஆவணங்களை வெளியிட்டுள்ளோம்.

இது குறித்து, திட்டக் கமிஷனிடம் அவர்கள் கேட்ட கேள்விகள் என்ன என்றும், அவர்கள் கொடுத்த முழு விளக்கத்தையும் காணலாம்.

தகவல்அறியும் உரிமை சட்டத்தின் படி மூன்று கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.
1. பி.எஸ்.எஸ். அரசு அமைப்பா?
2. பி.எஸ்.எஸ். திட்டக்கமிஷனால் நிதி பெறும் அமைப்பா?
3. பி.எஸ்.எஸ்.தனியார் அமைப்பா?

இதற்கு பதிலளித்த திட்டக்கமிஷன் அதிகாரி “பி.எஸ்.எஸ்.அரசு அமைப்பு இல்லை. அது எந்த ஒரு நிதியையும் திட்டக் கமிஷனிடம் இருந்து பெறும் அமைப்பும் இல்லை. அது ஒரு தனியார் அமைப்பு” என்று பதிலளித்துள்ளார்.

இது போன்ற கேள்விகளை தான் நாம் பீபள் பாரம் ஆஃப் இந்தியா மீது திட்டக் கமிஷனிடம் விரைவில் முழு தகவல் பெற உள்ளோம். மேலும், மத்திய அரசின் கீழ் செயல்படாத அமைப்புகள் மத்திய அரசின் சின்னமான சிங்கத்தை மட்டும் பயன்படுத்துவது மாபெரும் குற்றச் செயல் என்கின்றனர் உயர் அதிகாரிகள்.

மணிமொழியன் வழங்கும் பீபள் பாரம் ஆஃப் இந்தியா போலி ஐ.டி.கார்டை பயன்படுத்தி, டோல்கேட் மூலம் கடந்த 30 ஆண்டுகளாக அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்படுவதாக நிகழ்காலம் தொடர்ந்து செய்திமூலம் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் பயனில்லை.

இதற்கு காரணம், பீபள் பாரம் ஆஃப் இந்தியா குறித்தும், பி.எஸ்.எஸ் அமைப்பு குறித்த விவரம் சரிவர தெரியாமல் காவல்துறை வட்டாரங்கள் குழம்பியுள்ளது என்கிறார் மூத்த வழக்கறிஞர் அன்பு. போலிகளின் முகத்திரையை கிழிக்க என்றும் தயங்காது நிகழ்காலம். நடவடிக்கை பாயும் வரை நமது குரல் ஒலிக்கும்.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345