Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

கொரோனா நோயாளிகளுக்கு இலவச மருந்து.! ஜெகன் மோகன் அதிரடி.!!

ஆந்திராவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இன்று வரை 27 ஆயிரத்துக்கு மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 14,393 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். 12,533 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக 1814 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரை ஆந்திராவில் 309 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. எனவே கொரோன வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களில் குறைந்த அளவு பாதிப்பு உள்ளவர்கள் அனைவரும் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ள மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான கழிவறை மற்றும் தனித்தனி அறைகள் போதிய அளவில் இல்லாத நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி வீட்டில் தனிமைப்படுத்தி கொள்பவர்களுக்கு தேவையான வைட்டமின் மாத்திரைகள், சானிடைசர், கையுறைஉறை, முக கவசம், ஆக்சி மீட்டர் ஆகியவை உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே பாதிக்கப்பட்டவர்கள் அவரவர் வீடுகளிலேயே இருந்து சிகிச்சை பெறுவதன் மூலமாக நோயாளிகளும் மனதளவில் ஆரோக்கியமாக இருக்க முடியுன் என்பதால் ப விரைவில் குணம் அடைய வாய்ப்புகள் உள்ளன என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா நோயாளிகள் அனைவரையும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில், மருத்துவமனையில் சேர்ப்பதை விட வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள செய்து உரிய மருந்து மாத்திரைகளை சாப்பிட வலியுறுத்தினால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக பாதிப்பு உள்ளவர்களை மட்டும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள முடியாத வகையில் சிறிய வீடுகளில் வசிப்பவர்களுக்காக மாநிலம் முழுவதும் 37,500 படுக்கைகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவிட் தனிமைப்படுத்தப்பட்ட முகாமிற்கு அழைத்து சென்று அவர்களுக்கு வைட்டமின் நிறைந்த உணவு பொருள்கள், சுத்தமான குடிநீர் மற்றும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து உரிய மருந்து மாத்திரைகளை வழங்குவதை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என முதல்வர் ஜெகன் மோகன் கலெக்டர்களுடன் நடைபெற்ற காணொளிக்காட்சி கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தி அவர்களுக்கு உண்டான அனைத்து மருந்து மாத்திரைகளுடன் கூடிய தொகுப்பை இலவசமாக வழங்க ஆந்திர இளம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345