Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

ஆசனவாயில் இரத்தக் கசிவு! காக்கிகள் நடத்திய படுகொலை...

சாத்தான்குளம் அரசரடி தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் (58) என்பவரது மகன் பென்னீஸ். இவருக்கு வயது 31. இவர் சாத்தான்குளத்தில் காமராஜர் சிலை அருகே ஏபிஜே மொபைல்ஸ் என்ற பெயரில் ஒரு செல்போன் கடையை நடத்திவந்தார்.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று இரவில் கடையை அடைப்பது தொடர்பாக காவல்துறையினருக்கும் பென்னிக்சுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

காவல்துறை தாக்கியதால் தந்தை - மகன் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் சடலங்களை மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழு பிரேதப் பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இதை ஜாதிபிரச்சனையாக மாற்ற சிலர் முயன்று வருகின்றனர்.. ஏற்கனவே வியபாரிகளிடடம் கொந்தளித்து கிடந்த இந்த விஷயம் சாதி விவகாரத்தினால் திசை திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல்துறை பதிவுசெய்த முதல் தகவல் அறிக்கையில், காவல் துறையினரை திட்டிவிட்டு அவர்களே "தரையில் புரண்டார்கள். அதில் அவர்களுக்கு ஊமைக் காயம் ஏற்பட்டது," எனக் கூறப்பட்டுள்ளது.

இதை மறுத்த உறவினர் சார்லஸ் காவல்துறையினர் காவலில் இருக்கும்போது பென்னீஸின் ஆசன வாயில் லத்தியால் குத்தியதால் ஏற்பட்ட ரத்தப் போக்கினாலேயே அவர் உயிர் பிரிந்ததாக குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில், அவர்களது உடல்கள் வைக்கப்பட்டிருந்த பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் கோவில்பட்டி நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் விசாரணை நடத்தினார். இதற்குப் பிறகு, சாத்தான்குளம் காவல் நிலையத்தைச் சேர்ந்த ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகிய இருவரையும் இடைநீக்கம் செய்து காவல்துறை கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் உத்தரவிட்டிருக்கிறார்.

செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அந்த காவல்நிலையத்தில் பணிபுரிந்த அனைத்து காவலர்களுமே இடமாற்றம் செய்யப்படுவார்கள் என தெரிவித்திருக்கிறார்.

இந்த இருவரின் மரணத்திற்கு காவல்துறையினர் தான் காரணம் என்று கூறி காவல்துறையை கண்டித்து, உயிரிழந்தவர்களின் உறவினர்கள், அரசியல் ‌கட்சியினர் மற்றும் வணிகர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், உயிர்யிழந்த குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார் கனிமொழி.

இச் சம்பவம் குறித்து தமிழக அரசு அறிவித்துள்ள அளிக்கையில் இருவருக்கும் தலா 10லட்சும் வழங்கியும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி.

கொரோனா காலத்தில் காவல்துறையில் பலர் சைக்கோ போல் நடந்துகொள்வதும், வியாபாரிகள் மீது தாக்குதல் நடத்துவதும். அரசு செவிகளுக்கு சென்றாலும் கண்டுகொள்ளாமல் மவுனம் காத்ததால் ஏற்பட்ட படுகொலை என்கின்றனர் நீதிஅரசர்கள், பொதுமக்கள், மனநல மருத்துவர்கள்.

தமிழகத்தில் 90சதவீத காவலர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்றில் தகவல் வெளியானது. இதைச் சுட்டுகாட்டிய சமூக ஆர்வலர்கள் விரைவில் உயர் அதிகாரிகள் விழித்துக்கொண்டு காவலர்களுக்கு, யோகா, தியானம், கவுன்சிலிங் போன்ற பயிற்சிகள் வழங்கி மனதளவிலும், உடல் அளவிலும் விரைவில் தீர்வு கானும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர்.

செய்வார்களா அதிகாரிகள்...

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345