Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

வைரஸ் கிருமிகளை அழிக்கும் கோயில் வழிபாட்டு முறைகள்

தற்போது உலகை ஆட்டிப்படைத்துக் கொண் டிருப்பது கொரோனா... கண்ணுக்குத் தெரியாத ஒருசிறு கிருமியாக இருந்தாலும் இதற்கு உலகமே அஞ்சி நடுங்குகிறது. ஐரோப்பாவில் குறிப்பாக இத்தாலியில் பலியெடுக்கின்றது கொரோனா.

கொரோனாவினால் அதிக உயிர்கள் பலியானது சீனாவில். இரண்டாவது இடத்தில் இத்தாலியும், மூன்றாவது இடத்தில் ஈரானும், நான்காம் இடத்தில் தென் கொரியாவும்உள்ளன.இத்தாலியைத் தொடர்ந்து பிரிட்டன், ஸ்பெ யின், ஜெர்மன் ஆகிய நாடுகளில் கொரோனா பரவிக் கொண்டிருக்கின்றது. தற்போது உலக நாடுகள் அனைத்திலும் தனது கொடூர பாதத்தை வைத்துள்ளது கொரோனா.

உலகின் பல பகுதிகளை அழிக்கும் அணு ஆயுதங்களை கண்டுபிடித்துவிட்டேன் அதனால் நான்தான் உலகின் மிகப்பெரிய வல்லரசு என்று மார்தட்டியவர்கள், இன்று அணுவைவிட சிறிய கிருமியான கொரோனா வைரஸ் முன் மண்டியிட்டு பயத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பது வேதனையான விஷயமாக இருந்தாலும். இதுவும் ஒரு படிப்பினையாகத்தான் எடுத்து கொள்ளவேண்டும்.

இந்து மதம் காட்டிய வழி...
மூட நம்பிக்கை, மனித இனத்தில் பாகுபாடு என்று நாம் அலட்சியம் செய்ததை இன்று உலகமே கடைபிடிக்கிறது.

இந்து ஆலயங்களில் வழிபாட்டுக்கு முன்பு சம்பிரதாயபடி கால் கையினை கழுவிவிட்டுத் தான் உள்ளே செல்ல வேண்டும் என்றநடைமுறை இருந்தது, ஆனால் அதை தீண்டாமையின் உச்ச கட்டம், சக மனிதனை தொட்டால் தீட்டு என்று இந்து மதம் போதிப்ப தாக கூறி கிண்டலடித்த கூட்டம், இன்று சக மனிதர் களை தொடக்கூட அஞ்சுகிறது, அடுத்தவர் கைகள் பட்டுவிடுமோ என்று அஞ்சுகின்றது.

கிருமிகளை தடுத்த நடைமுறை...
* கோவிலுக்கு செல்லும்முன் குளத்தில் கை, கால்களை நன்றாக நனைக்கவேண்டும். இதனால் நோய் பரவும் முதல் வழி தடுக்கப் படுகின்றது.
* ஆலயத்தில் சுவாமிக்குக் காட்டும் தீபத்தில் கையினை வைக்கும் பொழுதும், அக்கையினை கண்ணில் வைக்கும் பொழுதும் கிருமிகள் இருந்தால் அழிந்து விடும், கற்பூரம் ஏற்றி கண்ணில் ஒத்துவதன் உண்மைத் தத்துவம் இதுதான்.
* கையினால் முகத்தை தொடாதீர் கள், கண்ணை மூக்கை தொடாதீர்கள். அடிக்கடி கழுவுங்கள் என இப்போது உலகம் ஒப்பாரி வைக்கும் வேளையில்....தீபச் சுடரில் கைகளை காட்டி சூடேற்று. அதை முகத்துக்கும் கொடு நோய் பரவாது என என்றோ சொன்ன மதம் இந்துமதம்.
* கர்ப்பக் கிரகத்தின் முன் வழிபாடு முடிந்ததும், கொடுக்கும் விபூதியினை நெற்றி யில் பூசினால் நோய்க் கிருமிகள் முகத்தில் அண்டாது. அது கிருமி நாசினி, பசு சாண சாம்பல் இருக்குமிடம் கிருமிகள் வராது.
* சாம்பிராணி புகையில் காற்றில் பரவும் கிருமிகள் அழிந்து விடுகின்றன. இதனால்தான் ஆலயத்தில் புகை பரப்பியதன் பயனும் அது தான். ஆலயமெங்கும் தீபம் ஏற்றப்படும் தத்துவமும் இதுவே, அதுவும் நெய்யிலும் இன்னும் சில எண்ணெயிலும் எரியும் நெருப்பு கொடுக்கும் சக்தி விஷேஷமானது.
* இவை அனைத்தும் வீட்டில் விளக்கேற்றி, சாம்பிராணி போட்டு, கற்பூர தீபம் காட்டி சுவாமியை வழிபடும் போது, வீடும் நோய்க் கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கப் படுகிறது.
* ஆலயங்களில் தரப்படும் சில பொருட்கள் கலந்த தீர்த்தம் மருத்துவ குணம் வாய்ந்தது, சர்வ கிருமி நாசினி, குடித்தால் தொற்று நோய் எளிதில் அண்டாது, அதை கைகளில் தேய்த்து கொண்டால் நோய் தடுக்கப்படும்.
* கோயில்களில் பிரச்சாதம் என தரும் தேங்காய் முதல் மிளகு கலந்த பொங்கல் வரை எல்லாமும் மருந்தே.
* அது வைஷ்ணவ ஆலயமாக இருந்தால் துளசியும், அம்மன் கோவிலாக இருந்தால் கொடுக்கபடும் வேப்பிலையும் சிறந்த நோய் தடுப்பு மருந்துகள்.
* ஆலய மணி ஒலிக்க ஒலிக்க வழிபாடு நடத்துவது ஏன்? ஆலயமணியின் சில அதிர்வு கள் நுண்ணிய அதிர்வுகளை ஏற்படுத்தும் என்கின்றார்கள், மெல்லிய எலக்ட்ரிக் ஷாக் சிகிச்சைக்குரிய அதிர்வினை அது கொடுக்கும், ரத்த ஓட்டம் சீர்படும். இசை ஒலிக்கப்படும் தத்துவமும் இதுவே.
* கோவில் எல்லோரும் வரும் இடம். விக்கிரகங் களையும் ஐயரையும் எப்பொழுதும் மிகவும் சுத்தமாக இருக்கச் சொன்னார்கள். அர்ச்சகர் தள்ளி நிற்பதும் அதிகம் தொட்டுப் பேசாததன் காரணமும் இதுதான்.
* மாமிச உணவு உடல் வெப்பத்தை கூட்டும். ஆலயங்களில் கூடுதல் வெப்பம் நிலவும் என்பதாலும் அசைவ உணவினை உண்டவர்க்கு ஆலயத்தில் அனுமதி இல்லை என்றார்கள்.
* அக்காலத்தில் விக்கிரகத்தை தொட்டு வணங்கும் வழக்கம் இருந்தது, பலர் தொட்டு செல்லும் நிலையில் நோய் பரவிவிட கூடாது என்பதற்காக அடிக்கடி நீரும் இன்னும் சில வஸ்துகளும் இட்டு கழுவி சாம்பிராணியிட்டு சுத்தமாக்கி வைத்தார்கள். கற்பூர தீ கூட கிருமி அழிக்கும் தன்மை கொண்டதே,
* திதி கொடுத்தல் இன்னும் சில விஷயங் களில் அர்ச்சகர் எமது கையில் தர்ப்பை கட்டு கின்றாரே ஏன்? தர்ப்பையில் நோய் கிருமி பரவாது என்பதை அன்றே அறிந்திருந்தது இந்து சமூகம்.
* இந்துக்கள் எதெல்லாம் செய்ய சொன்னார் களோ அதெல்லாம் நோய் தடுப்பென்றும், எதெல்லாம் தீட்டு என்றார்களோ அதெல்லாம் நோய் பரப்பும் விஷயம் என்பதை இப்போது மௌனமாக ஒப்புகொள்கின்றது உலகம்.

தொற்றுநோய் என புத்த விகாரை முதல் மேற்கத்திய தேவாலயம் வரை மூடப்பட்ட நிலையில், இந்து ஆலயங்களின் அன்றாட நிகழ்வுகளில் ஒழிந்திருக்கும் நோய் தடுப்பு முறையினையும் அக்காலத்திலே மிக நுட்பமாக செய்யபட்டிருக்கும் ஏற்பாடுகளையும் பற்றி வியந்து கொண்டிருக்கின்றது உலகம்.

இங்கு எதுவும் மூட நம்பிக்கை அல்ல, புரிந்து கொள்ள முடியாத மூடர்களின் கூட்டமே அப்படி சொல்லுமே அன்றி, அறிவுள்ள உலகம் நெருக்கடியான இந்நேரத்தில் இந்து ஆலயங்களின் பெருமையினை உணர்ந்து செயல் பட்டுக் கொண்டிருக்கின்றது.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345