‘மகத்' என்று சொன்னால், அளந்து பார்க்கமுடியாத, பெரிய விஷயம். இறைவனை கண்களால் பார்த்த சித்தர்/ மஹான்களைப் பார்த்தால் சந்தோஷம் ஏற்படும். இப்படி மகான்களைப் பார்த்துவிட்டு வருவது வழக்கமாக இருந்தது.
திருவண்ணாமலையில் கிரிபிரதட்க்ஷணம் செய்கிறார்கள். அங்கு மலையே சுவாமியாக இருக்கிறது. பஞ்சபூதத்தில் அக்னி க்ஷேத்ரம். எரிதழல். ஒரு பூதமாகிய நெருப்பு தெரிந்ததிலிருந்து எரிந்து கொண்டிருக்கும். பஞ்ச பூதத்தில் ஒரு பூதமாக இருப்பதில் பகவானின் பெருமை தெரிகிறது. ‘காரணம்' என்பதை குறிப்பால் உணர்த்துவதே சிவலிங்க உருவம்.
ரமண மஹரிஷியிடம் கேட்டார் ஒருவர் 'ஈகோ' என்கிற ஆணவம் என்றால் எது?
‘கோபித்துக் கொண்டு வெளியே போனாயே! அதான்' என்றார் ரமண மஹரிஷி,
அவர் திருவண்ணாமலை வந்தர். உட்கார்ந்தார். எங்கே போனாலும் துன்பம் என்றார் உலகத்தில்.
‘ஐயா! தேன் போன்று ஏதாவது சொல்லுங்களேன்?' என்றார், ‘தேனை எடுக்க தேனி கொட்டுகிறது-எப்படி சொல்வது?' என்றார். இது போன்று மகான்களின் சொற்களைக் கேட்டால், ஆன்மா வளரும் என்கிறார் பிரும்மேந்திரர்.
‘ஆத்மா குஹாயாம் விஹிதோஸ்ய ஜந்தோ'
‘ஆத்மா' என்கிற குகைக்குள்ளே ஆண்டவன் சிறு பூச்சியாய் இருக்கிறான், என்று கேட்பதற்குச் சுவையாக இருக்கும். ஆண்டவனைப் பார்க்க விருப்பம் வரவேண்டும். விருப்பம் எப்போது தெரிகிறது என்று பார்த்தால் ‘பக்தி' வரும் என்பது புரியும்.
பூஜ்ய ஸ்ரீசத்குரு சதாசிவ பிரும்மேந்திரரின் அருளுரையிலிருந்து தொகுத்தது எஸ்.மகாதேவன், போன் 098410 28028